Cat Viral Video: இணையத்தில் எப்போது ஒரு விவாதம் ஓடிக்கொண்டே இருக்கும். அது இரு நடிகர்களின் ரசிகர்கள் இடையே இருக்கலாம், கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே இருக்கலாம் அவ்வளவு நாய் - பூனை வளர்ப்போர் இடையே கூட எப்போதும் எது சிறந்தது என்ற சச்சரவு நடந்துகொண்டே தான் இருக்கும்.
நாய் வளர்ப்போர் நாய் நன்றியுள்ளது, எதை சாப்பிடக்கொடுத்தாலும் அதை பொருட்படுத்தாமல் சாப்பிடும், நம்மை நன்றாக பாதுகாக்கவும், அன்பை செலுத்தும் என ஒரு பட்டியலே போடுவார்கள். மறுப்புறம், பூனை பிரியர்களோ நாய் வளர்போருக்கு நேரெதிராக ஒரு பட்டியலை போட்டாலும், பூனை தான் 'க்யூட்' என்ற ஒற்றை வாதத்தை மட்டும் விடவே மாட்டார்கள். இந்த அளவிற்கு பூனை பிரியர்கள் இணையத்தில் நிறைந்திருக்கிறார்கள் எனலாம்.
பீஸ்ட் மோட்
பூனைகள் மர்மமான மற்றும் கணிக்க முடியாத விலங்குகளில் ஒன்று. அவற்றை பயிற்றுவிப்பது அல்லது கற்பிப்பது மிகவும் சவாலானது. நாய்களைப் போலல்லாமல், இந்த பூனைகள் தங்களுக்கு விருப்பமானதை மட்டுமே செய்கின்றன மற்றும் அவற்றை வளர்ப்போரின் எண்ணங்களைப் பற்றி அவை கவலைப்படுவதில்லை. அந்த வகையில், பூனையின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி, பூனைகள் பெரும்பாலும் ஒதுங்கி இருக்கும் விலங்குகள்.
Cat owner suddenly gets attacked by his cat unprovoked and for no reason pic.twitter.com/X1TeAEFZCT
— CCTV IDIOTS (@cctvidiots) August 6, 2023
என்ன நடந்தது?
அந்த வீடியோவில், அமைதியாக இருந்த ஒரு வளர்ப்பு பூனை அதன் உரிமையாளரை எந்தவித வெளிப்படையான காரணமும் இல்லாமல் திடீரென தாக்குவதை நீங்கள் காணலாம். பூனைக்கு இடையூறு விளைவிக்காமல் ஒரு நபர் வீட்டிற்குள் குளிர்சாதனப்பெட்டியை ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு நகர்த்துவதை வீடியோ காட்டுகிறது. திடீரென்று, அந்த பூனை அதன் உரிமையாளரைத் தாக்கத் தொடங்குகிறது.
அந்த பூனையின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கு அவரும் ஓடினார். இருப்பினும் தொடர்ந்து அந்த பூனை தாக்குதல் நடத்தியதால் அவர் ஒரு கதவுக்குப் பின்னால் மறைந்துகொண்டார். அப்போதும், அது தொடர் தாக்குதலை தொடுக்க, அதனை மற்றொருக்கு அறைக்கு தள்ளி, ஒரு ஸ்கிரீனை இழுத்துவிட்டு, அதன் தாக்குதலில் இருந்து தப்பித்தார்.
அதிகம் பகிரும் நெட்டிசன்கள்
அந்த சம்பவம் முழுவதும் அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி வீடியோவே, தற்போது இணையத்தில் வெளியாக வைரலாக பரவி வருகிறது. சிசிடிவி காட்சிகளில் உள்ள தேதியின்படி, இந்த சம்பவம் இந்தாண்டு மே மாதம் நடந்ததாக தெரிகிறது. அந்த வீடியோ ட்விட்டரில் @CCTVidiots என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. "பூனை உரிமையாளர் திடீரென தனது பூனையால் எந்த காரணமும் இல்லாமல் தாக்கப்படுகிறார்" என அதன் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து, 9.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் 42k க்கும் அதிகமான விருப்பங்களைப் பெற்றுள்ளது. ட்விட்டர் பயனர்கள் தங்கள் எண்ணங்களை கருத்துகள் பிரிவில் பகிர்ந்து கொள்ள தூண்டியது. பல பயனர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை தங்கள் செல்லப் பூனைகளுடன் பகிர்ந்து கொண்டனர். உரிமையாளருக்கு அனுதாபம் தெரிவித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ