பிரதம மந்திரி தேர்தல் வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?: பிரகாஷ்ராஜ்

குஜராத் தேர்தல் முடிவுகள் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறதா என பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்  

Last Updated : Dec 18, 2017, 02:56 PM IST
பிரதம மந்திரி தேர்தல் வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?: பிரகாஷ்ராஜ் title=

நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இரு மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. 

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் அவர்களே!, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். ஆனால், உண்மையிலேயே நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்களா..? என தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறியது என்ன ஆனது என கேள்வி எழுப்பிய நடிகர் பிரகாஷ்ராஜ், பிரித்தாளும் அரசியல் வேலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், மதம், ஜாதி ஆகியவற்றை தாண்டியும் நாட்டில் மிகப்பெரிய பிரச்னைகள் இருப்பதாகவும் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். 

நாட்டில் பின் தங்கிய நிலையில் உள்ள ஏழைகள், விவசாயிகள், கிராமப்புற மக்களின் குரல்கள் உங்களுக்கு கேட்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Trending News