நண்பர்களுக்காக சமையல் செய்யும் சச்சின் - வைரல் வீடியோ!!

புத்தாண்டு பிறந்த்தையொட்டி, இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தன் கையாலே சமைத்து நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Last Updated : Jan 2, 2018, 02:02 PM IST
நண்பர்களுக்காக சமையல் செய்யும் சச்சின் - வைரல் வீடியோ!! title=

புது வருடமான 2018-ம் ஆண்டை உலகமே வரவேற்றது. உலக முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக சச்சின் டெண்டுல்கர் தனது நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அப்பொழுது தன் கையாலே சமைத்து நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளார். அந்த வீடியோவை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் சச்சின். 

2017-ம் ஆண்டில் தமிழகத்தை அதிர வைத்த சம்பவங்கள்!!

அதில் அவர் கூறியதாவது:- புத்தாண்டு அன்று என் நண்பர்களுக்காக சமைப்பது மிகவும் சந்தோஷம். இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என் சமையலை சாப்பிட்டு அவர்கள் தங்கள் விரல்களை நக்கி வருகிறார்கள் என காமெடியாக கூறியுள்ளார். மேலும் அனைவரும் இந்த புத்தாண்டு தினத்தை நன்றாக கொண்டாடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் அற்புதமான புத்தாண்டு(2018) வாழ்த்துக்கள் என்றும் எப்போதும் ஆசீர்வாதத்துடன் இருங்கள் எனவும், தனது ட்விட்டார் பக்கத்தில் கூறியுள்ளார். 

 

 

தற்போது இந்த காணொளி வைரலாகி வருகிறது.

Trending News