இதென்னடா கராத்தே மாஸ்டருக்கு வந்த சோதனை - வைரல் வீடியோ

நிகழ்ச்சி ஒன்றில் கராத்தே மாஸ்டர் வித்தை காண்பிக்க முயற்சித்து, அடி வாங்கி கீழே விழுந்த வீடியோ வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 2, 2023, 11:04 AM IST
  • கராத்தே மாஸ்டர் வீடியோ
  • ரியாலிட்டி ஷோவில் காமெடி
  • இணையத்தில் வைரல்
இதென்னடா கராத்தே மாஸ்டருக்கு வந்த சோதனை - வைரல் வீடியோ title=

ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் உலாவினாலும் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். குறிப்பாக காமெடி வீடியோவாக இருந்தால் டிரெண்டிங்கில் இடம்பிடித்துவிடும். அப்படியான ஒரு செம காமெடி வீடியோ இப்போது வைரலாகியிருக்கிறது. வித்தை காண்பிக்க வந்த மாஸ்டரே, காமெடியனாக மாறிய சம்பவம் காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதுவும் பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோவில் அந்த காமெடி அரங்கேறியிருக்கிறது. அப்படி என்ன செய்துவிட்டார்? என்று நீங்கள் கேட்கலாம். வீடியோவை பார்த்தால் உங்களுக்கு புரியும்.

அதாவது, தற்காப்பு கலையில் நிபுணத்துவம் பெற்ற அந்த கராத்தே மாஸ்டர் உலகில் யாரும் செய்யாத விஷயங்களை செய்யப்போவதாக கூறிக் கொண்டு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்கிறார். அவர் ஏதோ மிகப்பெரிய வித்தையெல்லாம் காண்பிக்கப்போகிறார் என ரசிகர்களும், ரியாலிட்டிஷோ நடுவர்களும் காத்துக் கொண்டிருக்க, அவரும் வித்தைகளை செய்யத் தொடங்குகிறார். ஒரு மேஜை மீது இரு மரக்கட்டைகளை வைத்து, அதன் மீது ஒரு பலகையை வைத்து கால்களை இருபுறங்களிலும் நீட்டி அமர்ந்து கொள்கிறார். அதுவரை பார்க்கும்போது, செம வித்தைக்காரராக தெரிகிறதே.... ஏதோ புதுமையான விஷயத்தை செய்யப்போகிறார் என நடுவர்கள் ஆவலுடன் அவருடைய முகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க | தாத்தாவின் மாஸ் மூளையை பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

அவரும் அதற்கேற்ப கைகளை நீட்ட, கராத்தே மாஸ்டரின் உதவியாளர்கள் ஓரமாக வைத்திருந்த ஓடுகளை கொண்டு வந்து அவருடைய கைகள் மீது ஓங்கி அடித்து உடைக்கின்றனர். எந்தளவுக்கு பலசாலி நான் தெரியுமா? என்கிற வகையில் தான் அவருடைய முதல் ரியாக்ஷன் இருக்கிறது. அதன்பிறகு இன்னொரு கையை நீட்ட மற்றொரு உதவியாளர் ஓடி வந்து வலுவான ஓட்டை கை மீது சாத்தி உடைக்கிறார். ஓடு உடைகிறது. ஆனால், ஓடு வலுவாக இருந்துவிட்டதால் அதன் வலியை முகத்தில் வெளிப்படையாக காண்பிக்க முடியாமல் ஏதோ பாவாலா செய்து கொண்டு சமாளிக்கிறார். 

அப்போதே எதிரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு புரிந்துவிட்டது, இவர் ஒரு காமெடி பீஸ் என்று. அதனை உறுதி செய்யும் வகையில் தலையில் ஓட்டை உடைக்க முயற்சி செய்ய, அந்தரத்தில் இருந்தவர் அப்படி கீழே தொப்பென்று சாய்ந்து விழுந்துவிடுகிறார். இதனை பார்த்த அனைவரும் வயிறு குலுங்க சிரிக்கின்றனர். இப்படியும் ஒரு காமெடி பீஸ் சம்பவம் செய்திருக்கிறது என நினைத்து நினைத்து சிரிக்கின்றனர். அவர்களுடைய சிரிப்பு அடங்கவே சில நிமிடங்கள் எடுக்கிறது. டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ இப்போது 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று ஆல்டைம் டிரெண்டிங் வீடியோ லிஸ்டில் இருக்கிறது.

மேலும் படிக்க | கூல் ட்ரிங்சில் அதை கலந்த நண்பர்கள்.... மணமகனின் அப்பாவி ரியாக்‌ஷன்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News