மீண்டும் சிவகார்த்திக்கேயனுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திக்கேயன்  மற்றும் இயக்குனர் பொன்ராம் இணைந்துள்ள படம் சீமராஜா. 

Last Updated : Jun 4, 2018, 11:22 AM IST
மீண்டும் சிவகார்த்திக்கேயனுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திக்கேயன்  மற்றும் இயக்குனர் பொன்ராம் இணைந்துள்ள படம் சீமராஜா. 

இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மேலும்  பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யத்துள்ளார். 24 ஏ.எம் நிறுவனம் சார்பில் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். 

இந்நிலையில், சிவகார்த்திக்கேயனின் சீமராஜா படத்தில் கீர்த்தி சுரேஷ் கவுரவத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கவுரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக 24 ஏஎம் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

More Stories

Trending News