காதலர்களை விரட்டி விரட்டி அடித்த குரங்கு: பீதியில் பார்த்த மக்கள், வைரல் வீடியோ

Viral Video: விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் வைரலாகி வருகின்றன. சில வீடியோக்களில் அவை மிக அமைதியாகவும், சில வீடியோக்களில் மிகவும் ஆக்ரோஷமாகவும் காணப்படுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 21, 2023, 03:55 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் comedynation.teb என்ற பதிவில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்களும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
காதலர்களை விரட்டி விரட்டி அடித்த குரங்கு: பீதியில் பார்த்த மக்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் வைரலாகி வருகின்றன. சில வீடியோக்களில் அவை மிக அமைதியாகவும், சில வீடியோக்களில் மிகவும் ஆக்ரோஷமாகவும் காணப்படுகின்றன. அதுவும் குரங்குகளின் மன நிலையை நம்மால் கணிக்கவே முடியாது. இவை மிக பொறுமையாக இருக்கும் வீடியோகளையும் நாம் பார்த்துள்ளோம், மிக ஆக்ரோஷமாக அட்டாகாசம் செய்யும் வீடியோக்களையும் நாம் பார்த்துள்ளோம். சமீபத்திலும் இதன் கோவத்தை காண்பிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் காணப்படும் காட்சி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 

இதை பார்த்தால் ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், ஒரு பக்கம் பதட்டமும் ஏற்படுகின்றது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு ஆற்றில் ஒரு ஜோடி குளித்துக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. அங்கு வரும் குரங்கு ஒன்று அவர்களை உற்றுப் பார்க்கிறது, குரங்கு தொடர்ந்து அவர்களை அப்படியே பார்த்துக்கொண்டு இருகிறது. குரங்கை பார்த்த பெண் குஷியாகி அதன் மீது தண்ணீரை அடிக்கத் தொடங்குகிறார். பென்ணின் இந்த செயலால் குரங்குக்கு கோவம் வருகிறது. படிகளில் அமர்ந்திருந்த குரங்கு அங்கிருந்து கீழே போகத் தொடங்குகிறது. குரங்கு அருகில் வருவதைக் கண்டு பயந்துபோன பெண் அங்கிருந்து ஓடுகிறாள். ஆனால் அவருடன் இருந்த இளைஞன் அங்கேயே நிற்கிறான். 

ஜோடியை தாக்கிய குரங்கு 

முதலில் இளைஞன் குரங்கின் செயல்களை கவனித்து மெதுவாக அங்கிருந்து வெளியேறத் தொடங்குகிறார். ஆனால், சிறுவன் செல்வதைப் பார்த்த குரங்கு வேகமாக ஆற்றில் குதிக்கிறது. அவர் ஒருமுறை குரங்கை விரட்ட முயல்கிறார். ஆனால் அந்த இளைஞன் செய்த ஏதோ ஒரு விஷயம் அந்த குரங்கை கடுப்பெற்றியுள்ளது. அது அந்த இளைஞனை விடுவதாக இல்லை. குரங்கு தண்ணீரில் குதிக்கிறார். அதை கண்ட இளைஞன் அங்கும் இங்கும் ஓடத் தொடங்குகிறார். ஓடிக்கொண்டே ஆற்றில் இருந்து வெளியே வந்து தரையில் ஓட ஆரம்பிக்கிறார். ஆனாலும் குரங்கு அவரை விடவில்லை. தொடர்ந்து அந்த நபரை பின்தொடர்ந்தது. அவரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்களுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. 

மேலும் படிக்க | டான்ஸ் அழகா இல்லை மேக்கப் அழகா? இவ்வளவு நேர்த்தியா நடனம் ஆட முடியுமா? வீடியோ வைரல்

குரங்கு இளைஞனை விரட்டி அடிக்கும் வீடியோவை இங்கே காணலாம்

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் என்ற பதிவில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் (Netizens) இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'குரங்குக்கே கோவம் வரும் அளவிற்கு அப்படி என்ன செய்தார்கள்?’ என ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | மாத்தி யோசி! அதுக்குன்னு இப்படியா? ஓட்டுநரை கலாய்க்கும் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News