டான்ஸ் அழகா இல்லை மேக்கப் அழகா? இவ்வளவு நேர்த்தியா நடனம் ஆட முடியுமா? வீடியோ வைரல்

Optical Illusion Viral Video: நடனத்தால் மனதை கொள்ளை கொள்ளும் நாட்டியத் தாரகைகளின் வீடியோவை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 21, 2023, 08:50 AM IST
  • இந்த டான்ஸை ஆடுவது எத்தனை பேர் தெரியுமா?
  • அழகாய் ஆடும் நடன ராணிகள்
  • நடனத்தால் மனதை கொள்ளை கொள்ளும் நாட்டியத் தாரகைகள்
டான்ஸ் அழகா இல்லை மேக்கப் அழகா? இவ்வளவு நேர்த்தியா நடனம் ஆட முடியுமா? வீடியோ வைரல் title=

Viral Video:  நடனத்தால் என்ன செய்ய முடியும் என்பதை இதமாய் புரிய வைக்கும் இந்த வீடியோவை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மனதை கொள்ளை கொள்ளும் நாட்டியத் தாரகைகளின் அருமையான நடனம் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தாய் இருக்கிறது. இந்த நடனம் இந்தியாவின் பாரம்பரிய நடனமாக இல்லாவிட்டாலும், இந்தியர்களின் லைக்ஸ்களும் ஷேர் செய்யும் அளவும் மிகவும் அதிகமாய் இருக்கின்றன. 

ஆயிரம் கைகளைக் கொண்ட நடனம் என்று இந்த நடனத்தைக் குறிப்பிடும் ஆனந்த் மகேந்திரா, இந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒளியியல் மாயையையும் (optical illusion) பாராட்டுகிறார். அருமையான ஒத்திசைவு மட்டுமல்ல, இது அசாதாரண ஒருங்கிணைப்பு என்று குறிப்பிடும் அவர், இதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதை குறிப்பிடுகிறார்.

வேலை செய்யும் இடத்திலும் குடும்பத்துடன் இதுபோன்ற ஒத்திசைவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் எப்படி இருக்கும் என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார்.

மேலும் படிக்க | மாத்தி யோசி! அதுக்குன்னு இப்படியா? ஓட்டுநரை கலாய்க்கும் வீடியோ வைரல் 

வீடியோவை பார்த்தால் அவர் சொல்வது புரியும். ஆனால், இந்த வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்ப்பதுடன் நிறுத்திவிட முடியாது.

வைரல் வீடியோ...

இப்படியொரு நடனத்தை பார்த்ததுண்டா? இந்தக் கேள்விக்கு இல்லை என்ற பதில் தான் அநேகமாக அனைவரிடமும் இருக்கும்...

நடன வீடியோக்களை பலரும் ரசித்து பார்க்கின்றனர். வீடியோக்கள் மூலம் பலரது நடன திறமைகள் உலகின் பார்வைக்கு வந்துள்ளது. பலருக்கு இப்படிப்பட்ட வீடியோக்களுக்கு உலக அரங்கில் அறிமுகமும் அங்கீகாரமும் கிடைக்கிறது. இணையம் இல்லாவிட்டால், பலருக்கும் இதுபோன்ற வித்தியாசமான நடனங்களை பார்க்க வாய்ப்பே கிடைக்காது. பல்வேறு தரப்பினரின் கலைத் திறமைகளும் பிற திறமைகளும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. 

மேலும் படிக்க | இசை எங்கிருந்தெல்லாம் வருது ? சேர்ல இருந்தும் வரும்... மைக்ல இருந்தும் வரும்! வீடியோ வைரல்

கைக்குள் அடங்கிவிடும் மொபைலுக்குள் உலகம் சுருங்கிவிட்ட நிலையில், அதில் பகிரப்படும் வீடியோக்களும், புகைப்படங்களும் பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் மாறிவிட்டன. இதில் நமக்கு அவசியம் தேவையான செய்திகள் மட்டுமல்ல, பொழுதுபோக்கும் பல ஜாலியான வீடியோக்களும் வைரலாகின்றன.  

இது, நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ளவும் உதவுகிறது. இணைய தளங்களில் பகிரப்படும் வீடியோக்கள் மூலம் பொழுதுபோவது மட்டுமல்ல, வாழ்க்கைக்கு தேவையான பல அறிவுரைகளையும் சொல்லாமலேயே புரிந்துக் கொள்கிறோம்.

இந்த நடன வீடியோ, பார்ப்பதற்கு அழகாகவும் கலைநயத்துடன் இருக்கிறது என்பதை விட, எப்படி இவ்வளவு நடனக் கலைஞர்கள் ஒத்திசைந்து நடனமாடுகிறார்கள் என்று வியப்பு தோன்றினாலும், இதில் தொழில்நுட்பத்தின் பங்கும் கணிசமாக இருக்கிறது என்பதை மறுத்துவிடமுடியாது.

மேலும் படிக்க | ஆட்டோ வெயிட்டிங்ல இருந்தா என்ன செய்யலாம்? டான்ஸ் மாஸ்டரான டிரைவர் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News