மாத்தி யோசி! அதுக்குன்னு இப்படியா? ஓட்டுநரை கலாய்க்கும் வீடியோ வைரல்

Tractor Video Viral: வித்தியாசமான டிராக்டர் வைரல் ஆகிறது... இவ்வளவு உயரத்தில் டிராக்டரின் ஓட்டுநர் இருக்கை பொருத்தப்பட காரணம் என்ன? ட்ரெண்டிங் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 20, 2023, 04:33 PM IST
  • வித்தியாசமான டிராக்டர் வைரல்
  • உயரத்தில் டிராக்டரின் ஓட்டுநர் இருக்கை பொருத்தப்பட காரணம் என்ன?
  • ட்ரெண்டிங் வீடியோ சொல்லும் சுவாராசிய செய்தி
மாத்தி யோசி! அதுக்குன்னு இப்படியா? ஓட்டுநரை கலாய்க்கும் வீடியோ வைரல்  title=

வைரல் வீடியோ: இந்தியா விவசாய நாடு, விவசாயத்தை தொழிலாகவும் வாழ்வாதரமாகவும் கொண்டு மக்களில் பலர் வாழ்ந்து வருகின்றனர். விவசாய நிலங்கள் சுருங்கியது, விவசாயிகளுக்கு பிரச்சனை என பல விஷயங்கள் வேளாண் துறையில் முக்கியமான பிரச்சனைகளாக பேசப்படுகிறது. ஆனால், இன்று தொழில்நுட்பம் மேம்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயமும் ஒரு வித்தியாசமான நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. பாரம்பரிய விவசாயம் என்பதில் இருந்து விலகி, கலப்பு விதை, மாடித்தோட்டம், ரசாயன உரங்கள் என விவசாயத்தின் அடிப்படையிலேயே மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

கைக்குள் அடங்கிவிடும் மொபைலுக்குள் உலகம் சுருங்கிவிட்ட நிலையில், அதில் பகிரப்படும் வீடியோக்களும், புகைப்படங்கலும் பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் மாறிவிட்டன. விவசாயம் தொடர்பான பல செய்திகளையும் தெரிந்துக் கொள்ள இணையம் நமக்கு வாய்ப்பளிக்கிறது.

இதே இணையம் தான், நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ளவும் உதவுகிறது. இணைய தளங்களில் பகிரப்படும் வீடியோக்கள் மூலம் விவசாயம் தொடர்பான பல செய்திகள் பகிரப்பட்டு, மக்கள் அதனை முயற்சித்தும் பார்க்கின்றனர். இப்படிப்பட்ட வீடியோக்கள் மூலம் உலக அரங்கில் அறிமுகமும் அங்கீகாரமும் பெற்று பிரபலங்களாவதையும் பார்க்கிறோம்.

மேலும் படிக்க | ஆட்டோ வெயிட்டிங்ல இருந்தா என்ன செய்யலாம்? டான்ஸ் மாஸ்டரான டிரைவர் வீடியோ வைரல்

பல்வேறு விதமான வீடியோக்களும், கருத்துக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அனைவராலும் பார்க்கப்பட்டாலும், சில வீடியோக்கள் என்றென்றும் மனதை விட்டு அகலாது. அந்த வகையில் விவசாய டிராக்டர் ஒன்றின் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகிறது.

வைரலாகும் வீடியோவில், இளைஞர் ஒருவர் டிராக்டர் ஓட்டுகிறார். டிராக்டர் ஓட்டுவதில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? நீங்களே இந்த வீடியோவை பாருங்கள்...

வைரல் வீடியோ

திருமணங்கள், விழாக்கள், பள்ளிகள், தெருக்கள் என பல இடங்களில் பலர் ஆடும் நடனங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அனைவராலும் பார்த்து ரசிக்கப்படும் நிலையில் இதுபோன்ற வித்தியாசமான வீடியோக்களும் ரசிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் படிக்க | தீபாவளி அட்ராசிட்டீஸ்! ’உண்மையிலேயே’ பூசை வாங்கறது இதுதானா? மிதி வாங்கும் பக்தர்கள்

உண்மையில் இந்த வித்தியாசமான டிராக்டர் பார்க்க நன்றாகத் தான் இருக்கிறது. இருந்தாலும், இவ்வளவு உயரத்தில் டிராக்டரின் ஓட்டுநர் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறதே என்று பலரும் அதிசயிக்கின்றனர்.  இதனால் என்ன உபயோகம் என்ற கேள்வி எழுகிறது.

என்ன உபயோகம் இருக்க முடியும் என்று சிந்தித்துப் பார்த்தால், உயரமான மரங்களில், மரம் ஏறாமலேயே பழங்களைப் பறிக்கலாம். கிளைகளை வெட்டலாம் என சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பல விஷயங்களை செய்யலாம். 

ஆனால், இந்த ஓட்டுநர் இருக்கை, தேவைக்கு ஏற்றாற்போல உயரத்தை குறைத்துக் கொள்ளவும், அதிகரித்துக் கொள்ளவும் முடியும் என்பதால், தொழில்நுட்பத்தைப் பயன்பத்தி இருக்கும் இந்த டிராக்டர் அமைப்பாளருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

 மேலும் படிக்க | இசை எங்கிருந்தெல்லாம் வருது ? சேர்ல இருந்தும் வரும்... மைக்ல இருந்தும் வரும்! வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

.

Trending News