பாய்ந்து துரத்தும் சிறுத்தை: பதறியோடும் மக்களை விடாது துரத்தும் சீற்றக்கார சிறுத்தை

தாக்குதல் என்பது திடீரென நடப்பது தானே? அதிலும் காட்டில் இருந்து நாட்டுக்குள் வந்த விலங்கு தாக்கினால் யாராக இருந்தாலும் நிலைகுலைந்து விடுவார்கள்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 22, 2022, 01:43 PM IST
  • சிறுத்தையின் நகர உலா
  • சீறும் சிறுத்தை சிதறியோடும் மக்கள்
  • விடாது கருப்பாய் துரத்தும் சிறுத்தை
பாய்ந்து துரத்தும் சிறுத்தை: பதறியோடும் மக்களை விடாது துரத்தும் சீற்றக்கார சிறுத்தை title=

தாக்குதல் என்பது திடீரென நடப்பது தானே? அதிலும் காட்டில் இருந்து நாட்டுக்குள் வந்த விலங்கு தாக்கினால் யாராக இருந்தாலும் நிலைகுலைந்துவிடுவார்கள்.

அண்மைக்காலமாக இணையதளங்களில் விலங்குகளின் வீடியோ வைரலாகிவருகிரது. அது, விலங்குகளின் சாமார்த்தியமாக இருந்தாலும் சரி, நிலைகுலைந்த மனிதர்களின் வீடியோவாக இருந்தாலும் சரி.

திடீர் தாக்குதல்களை எதேச்சையாக வீடியோ பதிவு செய்தவர்கள், அதை சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர். அவை, வைரலாகி பலரின் விருப்பத்திற்குரிய வீடியோவாக மாறிவிடுகிறது.

இணையதளங்களில் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களில் சில பலராலும் ரசிக்கப்படாவிட்டாலும், அவை எழுப்பும் அச்சமும் திகைப்புமே அவற்றை வைரலாக்கிவிடுகின்றன.  

அதிலும் விலங்குகளின் வீடியோக்களும், பாம்பு வீடியோக்களும் அதிக அளவில் வைரலாகின்றன.

மேலும் படிக்க | 'ப்பா...' என வாய் பிளக்க வைக்கும் டான்ஸ்: இணையத்தை கலக்கும் பெண்ணின் வைரல் வீடியோ

அப்படிப்பட்ட சில வீடியோக்கள், பல படிப்பினைகளையும், பயத்தையும், ஆச்சரியத்தையும் திகைப்பையும் தருவதாக உள்ளன. அதுபோன்ற வீடியோக்கள் கூகுளில் டிரெண்டிங் ஆகின்றன.

அப்படி வைரலாகும் வீடியோக்களில் ஒன்று சிறுத்தை, திடீரென தாக்கும் வீடியோ. இந்த வீடியோ சில நொடிகள் மட்டுமே செல்லும் வீடியோவாக இருந்தாலும், பலத்த அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது.

அதிர்ச்சிக்கு காரணம் திடீர் தாக்குதல் என்றால் மனிதர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பறந்தோடுவார்கள் என்பதை உணர்த்தும் வீடியோ இது.

துணிந்து எதிர்தாக்குதல் நடத்தும் எண்ணத்திற்கு கூட இடம் கொடுக்காமல், சீறி பாய்ந்து பார்த்தவர்களை எல்லாம் அடித்து விட்டு பறக்கிறது சிறுத்தை. உண்மையில் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் என்ற சிங்கம் திரைப்பட டயலாக், இந்த சீறும் சிறுத்தைக்கு நன்றாக பொருந்துகிறது.  

மேலும் படிக்க | ஆட்டுக்குட்டிக்கும் தாய்ப்பால் கொடுக்கும் கோமாதாவின் பசு அன்பு

தாக்கிய விலங்கை கையாள்வது கடினம் என்னும்போது, உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை வெறும் 14 விநாடிகளே செல்லும் வீடியோவில் பார்க்க முடிகிறது. சிறுத்தை திடீரென குதித்து தாக்கும் காட்சியுடன் வீடியோ தொடங்குகிறது.

தாக்கிய சிறுத்தையின் அடியைப் பார்த்த மற்றவர்கள், அங்கிருந்து வெகுக்ண்டு ஓடுவதை பார்க்க முடிகிறது.

இந்த வீடியோவைப் பார்த்தாலே, சிறுத்தையின் சீற்றத்தில் பலர் அடிபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது என்பதும் தெரியவில்லை.

இந்த வீடியோவில் பின்னணியில் இந்தி மொழியில் மக்கள் அலறுவதைப் பார்க்கும்போது, இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது என்று தெரிகிறது.

இந்த வீடியோ ஏற்படுத்தும் அச்சமே, இதை வைரலாக்கியிருக்கிறது. தாங்கள் அனுபவித்த அச்சத்தை பிறரும் அனுபவிக்கட்டும் என்று சில நெட்டிசன்கள் நண்பர்களுக்கு பகிர்துள்ளனர். பகிரப் பெற்றவர்கள், தங்களுடைய நண்பர்களுக்கு வீடியோவை பகிர்வது என தொடர்ந்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: அட இது நான் தானா... குரங்கு குட்டியின் க்யூட் ரியாக்‌ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News