Video: செல்லபிராணியுடன் கால்பந்து விளையாடும் Lionel Messi!

பிரபல கால்பந்து ஆட்டக்காரர் லியோனல் மெஸி தனது செல்லப்பிராணியுடன் கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Jul 31, 2018, 03:47 PM IST
Video: செல்லபிராணியுடன் கால்பந்து விளையாடும் Lionel Messi! title=

பிரபல கால்பந்து ஆட்டக்காரர் லியோனல் மெஸி தனது செல்லப்பிராணியுடன் கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!

சிறந்த கால்பந்த்தாட்டக்காரர் எனப்படும் ‘FIFA Ballon d’Or’ பட்டத்தை 5 முறை வென்றவர் பிரபல கால்பந்து ஆட்டக்காரர் லியோனல் மெஸி. விடுமுறை நாளிலும் தனது கால்பந்து ஆட்ட பயிற்சியினை விடாத மெஸி, தன் செல்லப்பிராணியுடன் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

தற்போது ரஸ்யாவில் நடைப்பெற்ற 21-வது கால்பந்து உலக கோப்பினை முடித்து ஓய்வில் இருக்கும் பார்ஷிலோனா வீரர், விரைவில் 2018-19 ஆண்டிற்கான போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சியில் ஈடுப்பட தன் அணியுடன் இணையவுள்ளார்.

 

 

A post shared by AntoRoccuzzo88 (@antoroccuzzo88) on

இந்த ஓய்விற்கு மத்தியில் அவர் தன் செல்ல நாயுடன் விளையாடும் காட்சியினை அவரது மனைவி அன்டோனெல்லா ரெக்கூசோ படம்பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கதிதில் பதிவேற்றியுள்ளார்.

லியேனல் மெஸி தன் செல்ல பிராணிகளின் மீது மிகவும் பிரியம் கொண்டவர். இதனை நிரூபிக்கும் வகையிலேயே அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டு புகைப்படங்கள் காட்சியளிக்கின்றன.

Trending News