போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது எருமை மாடு பால் கறக்க மறுப்பதாக புகார் கூறி காவல் நிலையத்திற்குச் சென்றார். தனது எருமை மாட்டிற்கு மாந்திரீகத்தின் தாக்கத்தில் இருந்ததாக விவசாயி சந்தேகித்ததாக அதிகாரி கூறினார்.
சனிக்கிழமையன்று நயாகான் (Nayagaon) கிராமத்தில் மாடு மீது காவல்துறையிடம் புகார் அளித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது. "பாபுலால் ஜாதவ் (45) என அடையாளம் காணப்பட்ட கிராமவாசி, சனிக்கிழமையன்று நயாகான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், கடந்த சில நாட்களாக தனது எருமை பால் கறக்க அனுமதிப்பதில்லை" என புகார் அளித்ததாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அரவிந்த் ஷா பிடிஐயிடம் தெரிவித்தார்.
ALSO READ | Check in Baggage: விமானத்தில் உங்கள் லக்கேஜ் எப்படி கையாளப்படுகிறது என தெரியுமா!
சில கிராமவாசிகள் பால் கறக்க அனுமதிக்காத மாட்டின் மீது மாந்திரீகத்தின் தாக்கத்தில் இருப்பதாக தன்னிடம் கூறியதாக புகார் அளித்த அந்த விவசாயி கூறினார். புகார் அளித்த சுமார் நான்கு மணி நேரம் கழித்து, விவசாயி (Farmer) மீண்டும் தனது எருமை மாட்டுடன் காவல் நிலையத்தை அடைந்து மீண்டும் காவல்துறையின் உதவியை நாடினார், என்றார்.
“கிராமவாசிக்கு சில கால்நடை பராமரிப்பு ஆலோசனைகளை அளித்து உதவுமாறு காவல் நிலைய பொறுப்பாளரிடம் நான் கூறியிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை காலை எருமை பால் கறக்க அனுமதித்தது எனக் கூறி, விவசாயி இன்று மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்து போலீஸாருக்கு நன்றி தெரிவித்தார்," என்றும் ஷா கூறினார்.
ALSO READ | Name Astrology: இந்த எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட பெண்ணிற்கு தொழில் வெற்றி உறுதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR