ஒரே சைக்கிளில் 9 குழந்தைகளை கூட்டி செல்லும் நபர்! கார் கம்பெனி ஓனர்கள் கதறல்; வைரல் வீடியோ

ஒரே சைக்கிளில் 9 குழந்தைகளை கூட்டிச் செல்லும் நபரை பார்த்து கார் கம்பெனி ஓனர்கள் கதற ஆரம்பித்துள்ளனர். இவரை மாதிரி இருந்தால் காருக்கு வேலையே இருக்காது என நெட்டிசன்கள் காமெடி செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 12, 2022, 03:29 PM IST
  • ஒரே சைக்கிளில் 9 குழந்தைகளை அழைத்துச் செல்லும் நபர்
  • சைக்கிளை மாட்டு வண்டியாக மாற்றிவிட்டார் என கிண்டல்
  • டிவிட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் வீடியோ வைரல்
ஒரே சைக்கிளில் 9 குழந்தைகளை கூட்டி செல்லும் நபர்! கார் கம்பெனி ஓனர்கள் கதறல்; வைரல் வீடியோ title=

இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டிவிட்டரில் வைரல் வீடியோவுக்கு பஞ்சமே இருக்காது. ஏதாவது ஒரு வீடியோ இணையவாசிகளை கவர்ந்துவிடும். அப்படி அண்மையில் கவர்ந்த ஒரு வீடியோ என்னவென்றால், ஒரே சைக்கிளில் 9 குழந்தைகளை வைத்துக் கொண்டு செல்லும் ஒருவரின் வீடியோ. அந்த வீடியோவை பார்த்தால் நீங்களே ஷாக்காகிவிடுவீர்கள். 9 குழந்தைகளும் ஒரு சைக்கிளில் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து கொண்டு செல்வார்கள்.

மேலும் படிக்க | நான் வேற மாதிரி! காட்டு ராஜாவின் கண்ணடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்

பின்னால் இருக்கும் கேரியர், முன்பக்க சக்கரம் மீது ஒரு கேரியர் வைத்து குழந்தைகளை அழைத்துச் செல்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் செம ஷாக்காகியுள்ளனர். அட சாமி, இவர மாதிரி இருந்தா கார் கம்பெனிகாரங்க எல்லோரும் நஷ்டத்தில் தான் இருப்பாங்க என கமெண்ட் அடித்துள்ளனர். அந்தளவுக்கு ஒரு ஊரையே கூட்டிச் செல்வது போல், குழந்தைகளை அழைத்துச் செல்கிறார் அந்த நபர். இந்த வீடியோவை @JaikyYadav16 என்பவர் டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியிருப்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. நவம்பர் 15 ஆம் தேதி உலக மக்கள் தொகையானது 8 பில்லியனை எட்டியது. படுவேகமாக மக்கள் தொகை உயர்ந்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக கிண்டலாக இந்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர். ஒரு சிலர் ஒரு குழந்தையுடன் இருக்கும் நிலையில், சிலர் ஆறு ஏழு குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். உலகளவில் மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா மற்றும் சீனா முன்னணியில் இருக்கின்றன. முதல் இடத்தில் சீனா இருந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் அவர்களை இந்தியா ஓவர்டேக் செய்துவிடும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.

மேலும் படிக்க | Viral Video: தாய்பாலுக்கு மிஞ்சியது எதுவும் இல்லை...குட்டி யானை தாய்பால் குடிக்கும் அரிய காட்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News