உலகின் வயதான முதலையை பார்த்துள்ளீர்களா? 124 வயதாகிறதாம்..வைரல் வீடியோ..

Worlds Oldest Crocodile : உலகின் ஆபத்தான் மிருகங்களுள் ஒன்றாக கருதப்படும் முதலையின் மீது ஏறி, ஒருவர் சவாரி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 12, 2024, 07:19 PM IST
  • உலகின் வயதான முதலை
  • 1900ல் பிறந்ததாம்!
  • 124 வயது...
உலகின் வயதான முதலையை பார்த்துள்ளீர்களா? 124 வயதாகிறதாம்..வைரல் வீடியோ.. title=

Worlds Oldest Crocodile : மனிதர்களை குலை நடுங்க வைக்கும் பயங்கரமான மிருகங்களுள் ஒன்று, முதலை. இதனை பார்த்தாலே அனைவரும் ஓடும் போது, ஒரு நபர் அதன் மீது ஏறி சவாரி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ: 

பார்ப்பதற்கே அகோரமாகவும், பயங்கரமாகவும் இருக்கும் அந்த முதலை ஏதோ ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கிறது. அதனருகே பயமில்லாமல் போகும் நபர் ஒருவர் அதன் முதுகின் மீது முதலில் கை வைக்கிறார். பின்னர் அதை தடவி கொடுத்தது போலவே கேமராவில் பேசுகிறார்.

இந்த வீடியோ, தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த முதலையின் பெயர் ஹெண்ட்ரியாம். இது, 1900ல் பிறந்த முதலை என்று அந்த வீடியோவில் இருக்கும் நபர் கூறுகிறார். இந்த முதலைக்கு தற்போது 124 வயது ஆகிறது. உலகிலேயே மிக அதிகமான வயதான முதலை இதுதானாம். இதனை பார்த்த நெட்டிசன்கள், இத்ற்கு ஹார்டீன் விட்ட வண்ணம் இருக்கின்றனர். 

மேலும் படிக்க | வைரல் வீடியோ : விபத்தில் தூள்தூளான ஸ்கூட்டர், உயிர் பிழைத்த அதிசய மனிதன்

முதலைகள் பல ஆண்டுகள் உயிர் வாழுமா??

முதலைகளின் ஆயுட்காலமும் கிட்டத்தட்ட மனிதர்களை போலத்தான் உள்ளது. இவை, பிற மிருகங்களுடன் ஒப்பிடுகையில், அதிக ஆயுட்காலம் நிறைந்தவையாக இருக்கின்றனவாம். சராசரியாக 35 முதல் 75 வயது வரை, ஆயுட்காலம் பொறுந்தியவையாக இந்த முதலைகள் இருக்கின்றன. அதிலும், தனியாக கவனம் எடுத்து பராமறிக்கப்படும் முதலைகள், 70 வயதிற்கும் மேல் வாழுமாம். உப்பு தண்ணீரில் வாழும் முதலைகள், உலகின் மிக பெரிய முதலைகளாக கருதப்படுகின்றன. இவை வயதாகும் போது, வேட்டையாடும் வேகமும், பிற வேட்டையாடும் குணாதிசயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும் என ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. 

மேலும் படிக்க | சே... சும்மா இருங்களேண்டா... சிங்க குட்டிகளின் அட்ராசிட்டீஸ்... சிரிப்புக்கு 100% கேரண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News