சே... சும்மா இருங்களேண்டா... சிங்க குட்டிகளின் அட்ராசிட்டீஸ்... சிரிப்புக்கு 100% கேரண்டி

பொதுவாகவே இணையத்தில் விலங்குகள் தொடர்பான விடியோக்களை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி பார்ப்பது வழக்கம். அந்த வகையில் சிங்க குட்டிகள் தன் தாயை படுத்தி எடுக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 12, 2024, 05:25 PM IST
  • தாய் சிங்கம் பாவம் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறது.
  • இணைய வாசிகளை ரசிக்க வைத்த வைரல் வீடியோ.
  • காட்டு வாழ்க்கை சுவாரஸ்யங்கள் நிறைந்தது.
சே... சும்மா இருங்களேண்டா... சிங்க குட்டிகளின் அட்ராசிட்டீஸ்... சிரிப்புக்கு 100% கேரண்டி  title=

பொதுவாகவே இணையத்தில் விலங்குகள் தொடர்பான விடியோக்களை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி பார்ப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக, குட்டி விலங்குகள் விளையாடி சேட்டைகள் செய்யும் வீடியோக்கள் வைரல் ஆவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சிங்க குட்டிகள் தன் தாயை படுத்தி எடுக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

காட்டு வாழ்க்கை சுவாரஸ்யங்கள் நிறைந்தது. காடுகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது வேட்டை சம்பவங்கள் தான். ஆனால் காட்டிலும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பல நடக்கும். அந்த வகையில், சிங்கக் குட்டிகளின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சின்னஞ்சிறிய சிங்கக்குட்டிகள் அதன் அம்மாவை படுத்தும் பாடு, மிகவும் ரசிக்கச் செய்யும்.

தாய் என்றாலே, எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் மனநிலை வந்துவிடும் போலும். விலங்குகளும் அதற்கு விதிவிலக்கல்ல. பெண் சிங்கம் ஒன்று நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அதன் மீது சிங்க குட்டிகள் ஓடி ஆடி விளையாடுகின்றன. அதோடு அதன் வாலை பிடித்து இழுக்கின்றன அதன் வாலை பிடித்து இழுக்கின்றன. அதுமட்டுமில்லாத ஒன்று கூடி சண்டை போட்டுக் கொள்கின்றன. ஆனால், தாய் சிங்கம் பாவம் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறது. குட்டிகள் தனது அருகில் பாதுகாப்பாக இருக்கின்றன என்ற நிம்மதியுடன் தூங்கிக் கொண்டிருக்கிறது.

இணைய வாசிகளை ரசிக்க வைத்த வைரல் வீடியோவை கீழே காணலாம்.

மேலும் படிக்க | சே... என்ன கொடுமை சார்... காதலியை கவர நடனமாடும் ஆண் மயில்... அலட்சியம் செய்யும் பெண் மயில்

இனங்களை கடந்து உன்னதமான விஷயம் விலங்குகள் இடத்திலும் கொட்டி கிடப்பதை பார்க்கும் போது புதுவிதமான உணர்வை கொடுப்பதினால், பலரும் இந்த வீடியோவை பகிர்ந்த வருகின்றனர். அந்த வகையில், ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ பல லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும், லட்சக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.

மேலும் படிக்க | தலையில் கேமரா.... வேற லெவல் வைரல் வீடியோ: சிசிடிவி கண்டுபித்தவனையே மிரள வைத்த சம்பவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News