வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் ஒரு தனி கிரேஸ் உள்ளது. அதுவும் நாய், பூனை,பாம்பு, குரங்கு, சிங்கம், புலி ஆகிய மிருகங்கள் சமூக ஊடகங்களின் ஹீரோக்கள் என்றே கூறலாம். குரங்குகளின் கோமாளித்தனமும், வேடிக்கையும் அதிகமாக விரும்பி பார்க்கபப்டுகின்றன. குரங்கு வீடியோக்கள் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வைரல் ஆவதற்கு இதுவே காரணமாகும். சமீபத்திலும் அப்படி ஒரு குரங்கு வீடியோ வைரல் ஆகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் குரங்கு (Monkey) ஒன்று பேருந்துக்குள் நுழையும் வீடியோ வைரலாகி வருகிறது. பேருந்தில் ஏராளமான பயணிகள் இருக்கின்றனர். ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் குரங்கு பேருந்தின் உள்ளே நுழைவதை வீடியோவில் காண முடிகின்றது. சிறிது நேரம், குரங்கு வெளியே வரும் என பயணிகள் காத்திருந்தனர், ஆனால் அது வெளியே வராததால், பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு வெளியே வந்தனர்.
பேருந்து நடத்துனர் அனைத்து பயணிகளையும் பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறுவதை காணொளியில் காண முடிகின்றது. இதற்கிடையில் குரங்கு ஒரு பயணியின் தலையில் அமர்ந்தது. இதைக்கண்ட மற்ற பயணிகள் அச்சமடைந்தனர். சிலர் பயந்து பஸ்சை விட்டு ஓடினர். பஸ் கண்டக்டர் அனைவரையும் வெளியே வரும்படி கூறினார். ஆனால் குரங்கு அமைதியாக அங்கேயே இருந்தது.
பல முயற்சிகளுக்குப் பிறகு, குரங்கு இறுதியாக பேருந்திலிருந்து வெளியே வந்தது, பேருந்து முன்னோக்கி நகர்ந்தது. குரங்கு பேருந்திற்குள் நுழைந்ததாகவும், ஆனால் அதனால் எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும், இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பஸ் நடத்துனர் தெரிவித்துள்ளார். குரங்கு வெளியே போக பயணிகளை கீழே இறங்கச் சொன்னதாக அவர் மெலும் கூறினார்.
மேலும் படிக்க | மாலை மாற்ற மணமகன் போட்ட நிபந்தனை: முகம் சிவந்த மணமகள், வைரல் வீடியோ
குரங்கு தொல்லையால் பல நகரங்களில் மக்கள் பல வித சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். பொதுவாக லங்குர் வகை குரங்குகளை பார்த்து சாதாரண குரங்குகள் அஞ்சுவதுண்டு. ஆகையால் பல இடங்களில் மக்கள் லங்குர்களின் கட்அவுட்களைப் பயன்படுத்தி குரங்குகளை அச்சுறுத்த முயல்கின்றனர். ஆனாலும் குரங்குகளின் பிரச்சனை தொடர்கிறது. பல நகரங்களில் குரங்குகளின் தாக்குதலால் பலர் காயமடைவதாக செய்திகள் உள்ளன. ஆனால், இன்னும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.
பேருதில் குரங்கு அடித்த லூட்டியின் வீடியோவை இங்கே காணலாம்
बस के अंदर घुसा बंदर:
यात्रियों में मच गई चीख पुकार, महिलाएं नीचे कूद पड़ी,#दुबग्गा #सीतापुर_बाईपास पर #लखनऊ सिटी की एक बस में उस समय हंगामा खड़ा हो गया जब यात्रियों के साथ एक बंदर अंदर घुस गया.
बंदर को बस के अंदर देखकर वहां यात्रियों में हड़कंप मच गया और वे चीखने चिल्लाने लगे. pic.twitter.com/anzl9YRFoQ— MANOJ SHARMA LUCKNOW U (@ManojSh28986262) December 10, 2023
இணையத்தில் வீடியோ வைரல் ஆனது
லக்னோ பேருந்துக்குள் குரங்கு புகுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி (Viral Video) வருகிறது. பலர் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர், மேலும் சிலர் இதை சாக்காக வைத்து நிர்வாகத்தையும் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடக தளமன எக்ஸ் -இல் @ManojSh28986262 என்ற கணக்கிலும் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ