இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த தேயிலை: அசாமின் குவாஹாத்தியில் ஏலம் விடப்பட்ட டீ தற்போது உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. அசாமில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து இந்த தேயிலை, கிலோ ஒன்றுக்கு ரூ.99,999 என்ற விலையில் ஏலம் போனது. அதாவது, இந்த 1 கிலோ கோல்டன் டிப் டீயை தயாரித்த நிறுவனம் ரூ.99,999க்கு விற்பனை செய்தது. இந்த தேயிலையின் ஏலம் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் (GTAC) நடந்தது.
இந்த டீயை மொத்த வியாபாரி சவுரப் டீ டிரேடர்ஸ் வாங்கினார். இந்த தேயிலை அசாமின் திப்ருகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மனோஹரி தேயிலை தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த டீ 'மனோஹரி கோல்ட்' என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த தேயிலைக்கு ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த தேயிலை ஒரு கிலோ 75,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதே சமயம், அதற்கு ஓராண்டுக்கு முன், தேயிலை, கிலோ, 50,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ALSO READ | Jaggery tea benefits: குளிர்கால நோய்களை விரட்டும் வெல்ல கலந்த டீ..!!
2018ம் ஆண்டு 39 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்
தேயிலையின் விலை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது இதிலிருந்து தெளிவாகிறது. இந்த தேநீர் முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்திற்கு விற்கப்பட்டபோது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அதன் பிறகு இந்த தேநீர் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. சௌரப் டீ டிரேடர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எம்.எல்.மகேஸ்வரி இது குறித்து கூறுகையில், ‘ உலகம் முழுவதும் இந்த தேயிலைக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. இதற்கான டிமாண்ட் மற்றும் மிகக் குறைந்த உற்பத்தி காரணமாக, அதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது’ எனக் கூறினார்.
சௌரப் டீ டிரேடர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, நீண்ட நாட்களாக இந்த தேநீரை வாங்க முயற்சித்து வருவதாக தெரிவித்தார். இதற்காக தோட்ட உரிமையாளரை தொடர்பு கொண்டபோது, தனியாருக்கு விற்க மறுத்துவிட்டார். இந்த தேயிலையை ஏலத்திலேயே விற்பனை செய்வதாக தேயிலை தோட்ட உரிமையாளர் கூறியிருந்தார். இதன் பிறகு டீயை ரூ.99,999 ஏலத்தில் வாங்கினோம். 2018-ம் ஆண்டு கிலோ ரூ.39 ஆயிரத்திற்கும், 2019-ம் ஆண்டு ரூ.50 ஆயிரத்திற்கும் ஏலம் எடுத்து இந்த தேயிலையை வாங்கினோம். கடந்த ஆண்டு இந்த டீயை விஷ்ணு டீ நிறுவனம் வாங்கியது. ஒரு கிலோவிற்கு 75 ஆயிரம் ரூபாய் கொடுத்து தேநீர் வாங்கியுள்ளார்.
தேயிலையின் சிறப்பு
அஸ்ஸாமின் இந்த தேயிலை உலகம் முழுவதும் பிரபலமானது. இது அதன் சிறப்பு இதன் அபாரமான சுவை. அதன் வாசனை மற்றும் நிறமும் சுவையைப் போலவே மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். மேலும் தேயிலைகளில் கோல்டன் டிப் பயன்படுத்தப்படுகிறது.
ALSO READ | நீங்கள் வாங்கும் டீ கலப்படம் அற்றது தானா; கண்டுபிடிக்கும் எளிய முறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR