மோடி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் மன் பைரங்கி!

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட மேலும் ஒரு பையோ பிக் திரைப்படம் உருவாகவுள்ளது. 'மன் பைரங்கி' என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

Last Updated : Sep 17, 2019, 10:03 PM IST
மோடி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் மன் பைரங்கி!

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட மேலும் ஒரு பையோ பிக் திரைப்படம் உருவாகவுள்ளது. 'மன் பைரங்கி' என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிய பயோபிக் திரைப்படமாக 'மன் பைரங்கி' உருவாகிறது. இத்திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.  முன்னதாக மக்களவை தேர்தல் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறைச் சொல்லும் 'பிஎம் நரேந்திர மோடி' என்ற திரைப்படம் வெளியானது. விவேக் ஓபராய் நடிப்பில் உருவான இத்திரைப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் குவிந்தது.

இந்நிலையில் தற்போது 'மன் பைரங்கி' என்ற பெயரில் நரேந்திர மோடியைப் பற்றிய மற்றொரு பையோபிக் படம் வெளியாகவுள்ளது. நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாளான இன்று, இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

The man you know, the moments you don't! Presenting the first look of our next production venture with Mahaveer Jain, #MannBairagi, a special feature dedicated to the defining moments of our PM’s life. #HappyBirthdayPMModi

A post shared by Bhansali Productions (@bhansaliproductions) on

இத்திரைப்படம் குறித்த பன்சாலி தெரிவிக்கையில்., "இந்தக் கதை நன்றாக ஆய்வு செய்யப்பட்ட பிறகு எழுதப்பட்டுள்ளது. நமது பிரதமரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்த விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. கேள்விப்படாத இந்தக் கதை சொல்லப்பட வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் படம் எல்லாருக்கும் போய் சேரும் வகையில், எல்லாருக்குமான கருத்தைக் கொண்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

A special film on a special person by a special filmmaker on this special day, Happy Birthday @narendramodi Sir. So happy to present the first look of Sanjay Leela Bhansali & Mahaveer Jain's 'Mann Bairagi', an untold story of our PM, directed by Ssanjay Tripaathy. @bhansaliproductions #SanjayLeelaBhansali #MahaveerJain @dhanushkraja #HappyBDayPMModi

A post shared by Prabhas (@actorprabhas) on

படத்தின் இயக்குநர் சஞ்சய் த்ரிபாதி பேசுகையில், 'மன் பைரங்கி' மனிதத்தைப் பற்றிய, நமது நாட்டின் வலிமையான தலைவராக உருவான ஒருவரின் சுய கண்டுபிடிப்பைப் பற்றிய கதை" என்று குறிப்பிட்டுள்ளார்.

More Stories

Trending News