இணையத்தில் வைரலாகும் புதுமணப்பெண்ணின் நடனம்!

சமீபத்தில் வெளியான 'அட்ராங்கி ரே' படத்திலிருந்து வெளியான 'சக்கா சக்' பாடலுக்கு புதுமணப்பெண்ணும், அவரது சகோதரியும் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2022, 12:41 PM IST
இணையத்தில் வைரலாகும் புதுமணப்பெண்ணின் நடனம்! title=

சமீபத்தில் வெளியான 'அட்ராங்கி ரே' படத்திலிருந்து வெளியான 'சக்கா சக்' பாடலுக்கு புதுமணப்பெண்ணும், அவரது சகோதரியும் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.  தற்போது இணையத்தில் பதிவேற்றப்படும் ஒரு சில வீடியோக்கள் ஏராளமானோரை விரைவில் கவர்ந்துவிடுகிறது.  குழந்தைகள் செய்யும் குறும்புகள், வளர்ப்பு பிராணிகளின் குறும்புகள், நடனம் போன்றவை அதிகளவில் கவரப்பட்டு வருகிறது.  அதிலும் குறிப்பாக புதுமண பெண்கள் அல்லது தம்பதியர் மண கோலத்தில் நடனமாடும் வீடியோக்கள் பலவும் விரைவில் கவனத்தை ஈர்த்து விடுகிறது.  இதுபோல இணையவாசிகள் சிலர் பாடல்களை தேர்ந்தெடுத்து நடனமாடி அந்த பாடலை பலரும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

ALSO READ | Be Cool: காகத்திற்கே சால்வை போர்த்திய மனிதாபிமான மனிதன்! வீடியோ வைரல்

அந்த வகையில் தற்போது சகோதரிகள் இருவர் ட்ரெண்டிங் பாடலான  'சக்கா சக்' பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது.  ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்  'அட்ராங்கி ரே'.  இப்படத்தில் சாரா அலிகான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சாரா அலிகான் நடனமாடும் 'சக்கா சக்' பாடலுக்கு ஏராளமானோர் ரீல்ஸ் செய்து வருகின்றனர்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

'theweddingministry'  என்கிற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், புது மணப்பெண்ணும் அவரது சகோதரியும் ஒரே மாதிரியான லெஹெங்கா உடையை அணிந்துகொண்டு இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.  இந்த நடனத்திற்கு அவர்கள் போடும் ஸ்டெப்பும், கொடுக்கும் முகபாவனைகளும்  பார்வையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது.  தற்போது இந்த சகோதரிகளின் நடன வீடியோ ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.   'சக்கா சக்' எனும் இப்பாடலை ஸ்ரேயா கோஷல், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | இது புல் தின்னும் புலி அல்ல! காரை புல் பண்ணும் புல்லர் புலி! வைரலாகும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News