என்னைய விட்டுட்டு எப்புடி சாப்புட்றணு பாக்குறேன்... கோபத்தில் கொந்தளித்த பூனை!

பூனை ஒன்று அதன் உரிமையாளர் அதனை விட்டுவிட்டு தனியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தததை பார்த்து கோபப்பட்டு செய்யும் செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 2, 2022, 02:28 PM IST
  • சாக்லேட் சாப்பிடும் பூனையின் உரிமையாளர்.
  • தனக்கும் வேண்டும் என்று அடம்பிடிக்கும் பூனை.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
என்னைய விட்டுட்டு எப்புடி சாப்புட்றணு பாக்குறேன்... கோபத்தில் கொந்தளித்த பூனை! title=

நம்முடைய உலகத்திலிருந்து மற்றோரு புதுவிதமான உலகத்திற்கு கொண்டு செல்லும் வகையிலான பல காட்சிகள் இணையத்தில் உலா வருகிறது, நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வகையிலான பல காட்சிகள் இணையத்தில் நிரம்பி வழிகிறது.  நேரில் காண முடியாத பல சுவாரஸ்யமான சம்பவங்களை இணையம் வழியாக காணும்போது நமக்குள் ஒருபுது விதமான உற்சாகம் ஏற்படுகிறது.  பெரும்பாலும் இணையத்தில் அனைத்து தரப்பினராலும் அதிகம் ரசிக்கப்படுபவை குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்கள் மற்றும் விலங்குகளின் குறும்புத்தனங்கள் நிறைந்த வீடியோக்கள் தான்.  இவற்றை பார்க்கும்போதெல்லாம் நம்முடைய கவலைகள் மறந்து புத்துணர்வு கிடைத்துவிடுகிறது.

மேலும் படிக்க | இனி கிட்ட வந்த இதான் நடக்கும்.. கொரில்லாவின் சேட்டை வீடியோ!

இப்போது நாம் பார்க்கப்போவது ஒரு வளர்ப்பு பிராணியின் வீடியோ தான், அந்த வீடியோ டிவிட்டரில் Animales y bichitos என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரல் வீடியோவில், ஒரு சோஃபாவில் ஆரஞ்சு நிற டீ-ஷர்ட் அணிந்துகொண்டு ஒரு நபர் அமர்ந்துகொண்டு இருக்கிறார், அவரது அருகில் ஒரு பூனைக்குட்டி இருப்பதை பார்க்கமுடிகிறது.  அந்த நபர் பூனைக்கு கொடுக்காமல் ஏதோ ஒரு உணவை உண்ணுகிறார், இதனை கண்டு ஆத்திரமடைந்த பூனை அந்த நபருடன் சண்டையிட்டு உணவை பிடுங்க முயற்சி செய்கிறது.  அவர் மீண்டும் அதை பூனைக்கு தராததால் பூனை அவரது கையில் கடிக்க அந்த நபர் கத்துவதுடன் வீடியோ முடிவடைகிறது.

 

இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வைரலாகி இருக்கிறது, கடந்த அக்டோபர்-30ம் தேதி ட்விட்டரில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவானது இதுவரை பதினாறாயிரத்திற்கு மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.  மேலும் இந்த வீடியோவிற்கு நிறைய லைக்குகளும், கமெண்டுகளை குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News