அட கலிகாலமே!!! பாம்பை விழுங்கும் தவளை, வைரலாகும் வீடியோ

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 7, 2022, 04:30 PM IST
  • ஒரு சுவாரசியமான புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது..
  • விஷப்பாம்பு ஒன்று, அதன் உணவிற்கே உணவாகிப்போகும் வினோதம் இதில் நடக்கிறது.
  • இந்தோனேசியாவின் காடுகளில் இந்த அபூர்வ தருணம் பதிவாகியுள்ளது.
அட கலிகாலமே!!! பாம்பை விழுங்கும் தவளை, வைரலாகும் வீடியோ title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் படங்களும் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த பிரபஞ்சத்தில் உணவு சங்கிலி முக்கிய பங்கு வகிக்கின்றது. இயற்கையானது சில சமயங்களில் அதன் சொந்த விதிகளை மீறுவதை நாம் பார்க்கிறோம். சில சமயம் வேட்டையாடுபவன் வேட்டையாடப்படுவதையும், பலியாகும் பாவப்பட்ட நபர்கள் பலே கில்லாடிகளாகி, வேட்டையாடுவதையும் நாம் காண்கிறோம். இது மனிதர்களில் மட்டுமல்ல, விலங்குகளிலும் நடக்கும் பொதுவான விஷயம்தான். 

சமீபத்தில், இந்தோனேசியாவிலிருந்து இதற்கு சான்றாக ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது. இதைப் பார்த்தால் யாராலும் நம்ப முடியாது. ஆபத்தான விஷப்பாம்பு ஒன்று, அதன் உணவிற்கே உணவாகிப்போகும் வினோதம் இதில் நடக்கிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

பாம்பும் தவளையும் 

பாம்புக்கும் தவளைக்கும் உள்ள பகை அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு முறையும் இந்த இரண்டும் நேருக்கு நேர் வந்தால், ஒன்று இறப்பது உறுதி. ஒன்று என்று கூறுவதைவிட, தவளைதான் இறக்கும் என உறுதியாகவே கூறிவிடலாம். 

ஒவ்வொரு முறையும் பாம்பு (Snake) தவளையை வேட்டையாடினாலும், இந்த புகைப்படத்தில் அதற்கு மாறான ஒரு காட்சியைக் காண்கிறோம். தவளை தனது வாயில் ஒரு குட்டிப்பாம்பை பிடித்து உயிருடன் விழுங்குவதை புகைப்படத்தில் காண முடிகின்றது. இந்தோனேசியாவின் காடுகளில் இந்த அபூர்வ தருணம் பதிவாகியுள்ளது.

ALSO READ | மனித காதலை மிஞ்சும் மயிலின் காதல்: நெட்டிசன்களின் இதயத்தை கனமாக்கிய வைரல் வீடியோ

பாம்பை விழுங்கிய தவளை

ராட்சத தவளை பாம்பை விழுங்கும் இந்த படத்தை புகைப்பட கலைஞர் லிஸ்டியான்டோ சுஹார்ட்ஜோ தனது கேமராவில் படம் பிடித்துள்ளார். இந்த அபூர்வ நிகழ்வை தன் கண்களால் பார்த்த அவர், உடனே கேமராவில் படம் பிடித்தார். இந்த புகைப்படத்தை லிஸ்டியான்டோ சுஹார்ட்ஜோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் அனைவராலும் விரும்பப்பட்டு வருகிறது. பாம்பை தவளை வேட்டையாடுவது பொதுவான விஷயம் அல்ல. இந்த அபூர்வ தவளை 'ஆப்பிரிக்கன் புல் ஃப்ராக்’ வகை தவளை என்று புகைப்படக் கலைஞர் லிஸ்டியான்டோ கூறியுள்ளார். 

இந்த புகைப்படம் மிக அரிதானது

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இருந்து அவர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். பாம்புக்குட்டிக்கு அதன் அருகில் இந்த தவளை இருப்பது தெரியாமல் மாட்டிக்கொண்டது என லிஸ்டியாண்டோ கூறினார். 

எலிகளையும் வேட்டையாடும்

இந்த வகை தவளைகள் எலிகளை வேட்டையாடுவதையும் பலமுறை பார்த்ததாக லிசாடியான்டோ கூறினார். ஒரு தவளை பாம்பை வேட்டையாடுவது இது முதல் சம்பவம் அல்ல. இதற்கு முன்பே இதுபோன்ற ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பிப்ரவரி 2021 இல் வெளிவந்த ஒரு வீடியோவில் (Viral Video), ஒரு தவளை அதன் அளவை விட மிகப் பெரிய பாம்பை விழுங்க முயற்சிப்பதைக் காண முடிந்தது. 

ஆச்சரியப்படுத்தும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

ALSO READ | Snake Dance: பனைமரத்தில் பாம்பு! மரமேறும் நாகப்பாம்பு நடனமாடும் வீடியோ வைரல்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News