பாம்பை மார்போடு கட்டி தூங்கும் சிறுமி: ஷாக் ஆன நெட்டிசன்கள், வீடியோ வைரல்

Snake Viral Video: இப்படி கூட நடக்குமா என வியக்க வைக்கும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. பாம்புடன் ஒரு சிறுமி அசால்டாய் தூங்குவதை வீடியோவில் காண முடிகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 24, 2022, 05:22 PM IST
  • பாம்பை கட்டிக்கொண்டு தூங்கும் பெண்
  • அஞ்சாமல் சிரிக்கும் சிறுமி.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ
பாம்பை மார்போடு கட்டி தூங்கும் சிறுமி: ஷாக் ஆன நெட்டிசன்கள், வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம், இங்கு நாம் பல விதமான வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. வெளிவந்த உடனேயே இவை வைரல் ஆகி விடுகின்றன. நேரில் நெருங்க முடியாத பாம்புகளின் பல்வேறு வகையான வீடியோக்களை மக்கள் இந்த வீடியோக்களின் மூலம் கண்டு களிக்கிறார்கள். 

பெரும்பாலும் பாம்புகளை கண்டாலே அனைவரும் அஞ்சி ஓடத்தான் செய்வார்கள். ஆனால், இவற்றை சர்வ சாதாரணமாக கையாளும் பலரையும் நாம் இணையத்தில் கண்டு வியந்துள்ளோம். பாம்புகளை கொஞ்சி, உணவளித்து, தண்ணீர் கொடுத்து, விளையாடி மகிழும் பலரது வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்துள்ளன. ஆனால், இந்த அசாத்திய துணிச்சல் சிறு வயதினருக்கு இருப்பது மிக அரிது.

அப்படி ஒரு துணிச்சல் கொண்ட சிறுமியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் ஒரு பாம்பை தனது மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு படுக்கையில் தூங்குவதைக் காண முடிகின்றது. ஆனால், இப்படி ஒரு அசாத்திய செயலை செய்யும் போது அவர் அச்சப்படவில்லை. மாறாக, மிகவும் மகிழ்ச்சியாகவே காணப்படுகிறார். இடையில் அவர் பாம்புக்கு முத்தமிடுவதையும் காண முடிகின்றது. 

மேலும் படிக்க  | ‘ஏய்.. ஃபேர்வெல்லா இது?’ மாணவர்கள் கொடுத்த வினோதமான பிரியாவிடையின் வைரல் வீடியோ

பாம்பை கட்டிக்கொண்டு தூங்கும் பெண் 

இந்த வீடியோவில், ஒரு சிறுமி தனது கையில் ஆபத்தான பாம்புடன் தூங்குவதை காண முடிகின்றது. ஆனால், பாம்பு விழித்திருப்பது அதன் சில அசைவுகள் மூலம் தெரிகிறது. இதை முதலில் பார்க்கும் அனைவரும் அதிர்ச்சியடைவார்கள். இந்தக் காட்சி உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. 

பயமின்றி பாம்புடன் உறங்கும் பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ariana (@snakemasterexotics)

இந்த வீடியோவில் நாம் காண்பது போன்ற காட்சியை எங்கும் பொதுவாக காண முடியாது. இந்த வீடியோ snakemasterexotics என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் வந்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News