பண்டிகை காலத்தில் சிக்கனமாக செலவு செய்ய டிப்ஸ்! பர்ஸ் காலியாகாம பாத்துக்கலாம்…

அக்டோபர் மாதத்தில் பல்வேறு பண்டிகைகள் வர காத்திருக்கின்றன. இந்த நாட்களில் சிக்கனமாக செலவு செய்வது எப்படி? இதோ பார்க்கலாம்!  

Written by - Yuvashree | Last Updated : Oct 3, 2024, 03:53 PM IST
  • பண்டிகை காலங்களில் செலவுகளை குறைப்பது எப்படி?
  • ஷாப்பிங் செல்லும் போது பார்த்து செலவு செய்ய வேண்டும்
  • பர்ஸ் காலியாகாமல் இருக்க..இதை செய்யலாம்!
பண்டிகை காலத்தில் சிக்கனமாக செலவு செய்ய டிப்ஸ்! பர்ஸ் காலியாகாம பாத்துக்கலாம்… title=

பொதுவாகப் பண்டிகை காலம் வந்து விட்டாலே, ஷாப்பிங் செய்ய ஆரம்பித்து விடுவோம். சிலர், பாக்கெட்டில் பணம் காலியாகும் வரை பொருட்களையும் ஆடைகளையும் வாங்கி அடுக்கிக்கொண்டே இருப்பர். இப்படி, எண்டே இல்லாமல் ஷாப்பிங் செய்வதால், பண்டிகையெல்லாம் முடிந்த பிறகு பலர், பர்ஸி்ல் பணமில்லாமல் கையை பிசைந்து கொண்டிருப்பர். இதை எப்படி சமாளிக்க முடியும் சிலருக்கு கேள்விகள் இருக்கும். அவர்களுக்கான சிறந்த யோசனைகளை இங்கு பார்ப்போம். 

பண்டிகை என்று வந்து விட்டாலே அனைவரும் படையெடுப்பது, புத்தாடை வாங்கத்தான். அதன் பிறகுதான் எதுவாக இருந்தாலும் வாங்குவோம். பண்டிகை காலத்திற்கு எடுக்கும் ஆடைகள், பண்டிகைக்கு ஏற்றார் போல பிரம்மாண்டமாக இருக்கலாம். ஆனால், அவற்றை ஏதேனும் பெரிய நிகழ்ச்சிகளை தவிர வேறு எதற்கும் போட முடியாது. எனவே, ஆடையை ஆடம்பரமாக எடுப்பதை தவிர்த்து, மலிவான விலையில் நல்ல தரத்தில் வாங்கி அணிந்தால், அழகும் தரும், பெரிதாக செலவும் ஆகாது. 

திட்டமிடுதல்: 

முன்கூட்டியே கையில் இருக்கும் பணத்தில் என்னென்ன செலவு செய்ய வேண்டும் என்பதை, பிரீ பிளான் செய்து கொள்ள வேண்டும். பிளான் போடும்போது முதலில் முக்கிய செலவையும் அதன்பிறகு இதர செலவுகளையும் கணக்கிட்டு கையில் மீதி பணம் இருக்குமாறு செலவைப் திட்டமிட வேண்டும். 

ஷாப்பிங் பிளான்:

முதல் நாள் ஷாப்பிங் செய்யும்போது எது நமக்கு முதல் தேவையோ அதைத்தான் ஷாப்பிங் செய்ய வேண்டும். பிறகு நாம் பிளான் செய்தபடியே செலவு ஆகிருக்கிறாதா என்பதை சரி பார்க்க வேண்டும். அதில் பிளான் போட்டபடி செலவாகியுள்ளதா அல்லது அதற்கு மேல் செலவாகிவிட்டாதா என்பதை முதல் ஷாப்பிங்கில் பார்த்து விட வேண்டும்.

தள்ளுபடி ஆர்வம்: 

ஷாப்பிங் செய்ய பிளான் போடும் பாேது, நாம் தள்ளுபடியில் வாங்கினால் செலவுகளை குறைக்கலாம் என்று யோசிப்பவர்கள் சிலர் உள்ளனர், அவர்கள் பிளான் போடும் போதே தள்ளுபடி பிளானை சேர்த்து போட வேண்டும். தள்ளுபடி பிளானில் என்ன வாங்கலாம்-என்ன வாங்க வேண்டாம் என்பதை தனிதனியாகப் பிளான் போட்ட பிறகே அவர்கள் ஷாப்பிங்கை தொடங்க வேண்டும்.

பிளானைவிட அதிகம் செலவாகிவிட்டதா?

நாம் முன்கூட்டி திட்டமிட்டதை விட  அதிகமாக செலவாகி இருந்தால், இதர செலவுகளை குறைத்து விட வேண்டும். இதர செலவை குறைப்பது பெரிய சிரமமாக இருக்காது. 

மேலும் படிக்க | மனைவி உடன் சுற்றுலா போகும்போது... கணவன்மார்களே மறந்தும் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்!

குறைந்த பணத்தில் பண்டிகையை கொண்டாடுவது எப்படி? 

பணம் இல்லையே என யோசித்து ஃபீல் பண்ணுபவர்கள், கவலையை விடுங்கள். கையில் இருக்கும் பணத்தில் மகிழ்ச்சியுடன் வீட்டில் பிடித்த உணவைச் சமைத்து சாப்பிட்டு மனதிற்கு பிடித்த உறவினர்களுடன் புன்னகையுடன் உரையாடி நாளை மகிழ்ச்சியாக கழிக்கலாம்.

செலவைக்குறைத்து மகிழ்ச்சி பெருக எளிய யோசனை:

பண்டிகை காலத்தில் மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் செலவு செய்வது சிறந்ததாகும். அதைதவிர்த்து செலவை மீறிக் கடன் வாங்கி ஷாப்பிங் செய்ய வேண்டும் என்பது முட்டாள் தனமான செயல் என்று பலர் கூறுகின்றனர். 

பண்டிகைக்காலம் வந்தா ஷாப்பிங் மட்டும் இல்லை, உறவுகள் ஒன்றுக்கூடும் நாள்: உறவுகளை ஒன்றுக்கூட வைக்கும் இனிய நாள் என்றே கூறலாம். இதில் சொந்தபந்தங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இணைக்ககூடிய சக்தி பண்டிகைக்கு உண்டு. புதுத்துணி, சுவையான உணவு, இதுமட்டும் பண்டிகைக்கு முக்கியம் இல்லை. புது மனிதர்களைச் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

மேலும் படிக்க | அதிகமாக கோபம் வருகிறதா? ஆபத்து உங்களுக்கு தான்! கட்டுப்படுத்துவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News