அம்மாவை பார்த்து காப்பி அடிக்கும் குட்டி பூனை! வைரலாகும் வீடியோ!

பூனைக்குட்டிகள் பலரின் கவனங்களையும் ஈர்க்கும் வகையிலான வேடிக்கையான செயல்கள் பலவற்றை செய்து ட்ரெண்டாகி வருகின்றன.  

Written by - RK Spark | Last Updated : Sep 24, 2022, 07:42 AM IST
  • தாயை காப்பி அடிக்கும் பூனைக்குட்டி.
  • தனது தாய் போலவே செய்து பார்க்கிறது.
  • இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அம்மாவை பார்த்து காப்பி அடிக்கும் குட்டி பூனை! வைரலாகும் வீடியோ! title=

இந்த நவீன காலகட்டத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் இணையத்தளங்களிலேயே தங்களது பாதி நாட்களை கழிக்கின்றனர்.  அதற்கு காரணம் இணையத்தில் அனுதினமும் நாம் கண்டு ரசிக்கும் பல வேடிக்கையான மற்றும் மனதை ஈர்க்கும்படியான காட்சிகள் தான்.  நாம் நேரில் கண்டு ரசிக்க முடியாத பல அற்புதமான விஷயங்களையும் இணையம் நமக்கு ஒரே நொடியில் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது.  அப்படி அற்புதமான விஷயங்களில் நாம் மிகவும் ரசித்து பார்ப்பது என்னவோ விலங்குகளின் வீடியோக்கள் தான், அவை செய்யும் குறும்புத்தனங்கள் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களை போன்று இருப்பதால் அவை நம்மை பெரிதும் கவர்ந்துவிடுகிறது.  

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சமீபகாலமாக பூனைக்குட்டிகள் இணையவாசிகள் பலரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்றே கூறலாம், அந்தளவிற்கு பூனைகளின் வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.  இப்போதும் நாம் பார்க்கப்போவது பூனைகளின் சுட்டித்தனமான சேட்டைகளை தான், பூனைகளின் அந்த குறும்புத்தனமான காட்சிகள் ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  ஒரு தாய் கைகளை நாக்கால் சுத்தம் செய்துகொண்டிருப்பதை பார்த்த குட்டி பூனை அதைப்போலவே செய்கிறது, இப்படியே அந்த குட்டி பூனை, தாய் பூனை செய்வதை பார்த்து குறும்புத்தனமாக தானும் செய்து கொண்டிருக்கிறது.

 

இணையத்தில் பகிரப்பட்டிற்கும் இந்த பூனைகளின் குறும்புகளுமே பலரின் இதயங்களையும் கொள்ளை கொண்டிருக்கிறது.  இந்த வீடியோவை இணையவாசிகள் பகிர்ந்தும், லைக் செய்தும், பூனையின் வேடிக்கையான செயல்களுக்கு கமெண்டும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News