குட்டி யானையை பிரசவிக்கும் தாய் யானை! வீடியோ இணையத்தில் வைரல்!

யானை ஒன்று மலைப்பகுதியில் சிரமப்பட்டு அதன் குட்டியை ஈன்றெடுக்கும் கண்கலங்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 21, 2022, 05:40 PM IST
  • தனது குட்டியை ஈன்றேடுக்கும் தாய் யானை.
  • பிறந்த குட்டியை தட்டி எழுப்புகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
குட்டி யானையை பிரசவிக்கும் தாய் யானை! வீடியோ இணையத்தில் வைரல்! title=

தாய்மை என்கிற ஒன்று புனிதமானது, அது ஒரு எல்லையற்ற மகிழ்ச்சியை தரக்கூடிய அற்புதமான உறவு.  கருவுற்றதிலிருந்து அந்த குழந்தையை நல்லபடியாக ஈன்றெடுத்து இந்த உலகிற்கு கொண்டுவரும் வரை தாயின் போராட்டம் இருக்கும்.  மனிதர்களுக்கு மட்டும் இந்த தாய்மையுணர்வு கிடையாது, விலங்குகளுக்கும் தாய்மையுணர்வு இருக்கிறது.  சிலவகை உயிரினங்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும், சிலவகை உயிரினங்கள் மனிதர்களை போலவே குட்டியினை ஈன்றெடுத்து பாலூட்டுகிறது.  பெண்கள் பிரசவிக்கும் நேரத்தில் அவர்களுக்கு உதவிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் உறவினர்கள் என அருகில் ஏரளாமானோர் இருப்பார்கள், ஆனால் விலங்கினங்களுக்கோ, பறவையினங்களுக்கோ அப்படி கிடையாது, அவற்றின் பிள்ளைகளை இந்த உலகிற்கு கொண்டு வர அந்த தனி உயிரினம் மட்டுமே பாடுட வேண்டும்.

தற்போது இணையத்தில் யானை ஒன்று அதன் குட்டியை ஈன்றெடுக்கும் காட்சி தான் பலரின் கண்களையும் சில நொடிகள் வியர்க்க வைத்துருக்கிறது.  இந்த வீடியோவானது கென்யாவில் உள்ள மசாய் மாறா என்கிற பூங்காவில் படம்பிடிக்கப்பட்டு இருக்கிறது, இதனை கேப்ரியல் கோமோ என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.  அந்த வீடியோவில் பசுமையான புற்கள் சூழ்ந்த பகுதியில் பெய்யும் மழையில் நனைந்துகொண்டு ஒரு யானை நிற்கிறது.  அது தனது வயிற்றிலிருந்து யானைக்குட்டியை வெளியே கொண்டுவர முயற்சி செய்துகொண்டிருக்கிறது, சிறிது நேரத்தில் யானைக்குட்டி வெளியே வந்துவிடுகிறது.  அது தரையில் உருண்டு கிடக்கிறது, உடனே அங்கு சுற்றி நின்றுகொண்டிருந்த யானைகளும் அருகில் வருகின்றன.

 

மேலும் படிக்க | மணமகளை பார்த்து மயங்கிய மணமகன் மேடையில் செய்த வேலை: வைரல் வீடியோ

ஒருவழியாக அந்த தாய் யானை குட்டியை ஈன்றெடுத்ததும் அந்த யானைக்கூட்டங்களுக்கும், அங்கு இருந்தவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.  இதனை இணையத்தில் பார்த்தவர்களுக்கு கண்கள் கலங்கி மகிழ்ச்சி ஏற்பட்டு இருக்கிறது, இணையத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை 10.9 மில்லியனுக்கும் மேற்ப்பட்ட இணையாவசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.

மேலும் படிக்க | ஆசையாய் வந்த கணவன், வெச்சி செஞ்ச மனைவி: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News