Viral Video: தண்ணீரில் ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் மலைப்பாம்பும் முதலையும்

இணைய உலகில் பகிரப்படும் வன விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகி விடும்.  தற்போது முதலை மற்றும் மலைப்பாம்பு இடையேயான போராட்டம் குறித்த  ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 4, 2022, 12:10 PM IST
Viral Video: தண்ணீரில் ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் மலைப்பாம்பும் முதலையும் title=

இணைய உலகில் பகிரப்படும் வன விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகி விடும்.  தற்போது முதலை மற்றும் மலைப்பாம்பு இடையேயான போராட்டம் குறித்த  ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.  முதலைகள் தண்ணீரில் மிகவும் ஆபத்தான உயிரினங்களாக கருதப்படும் முதலையை அதன் கோட்டைக்கே சென்று சிறுத்தை வீழ்த்திய வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. 

நீரிலும் நிலத்திலும் திறமையாக வேட்டையாடும் திறன் பெற்றது முதலை. அதே நேரத்தில், . முதலையும் சிறுத்தையும் நேருக்கு நேர்  மோதிக் கொண்டால்  எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது போன்ற ஒரு காட்சியை சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொளியில் காணப்படுகிறது.

முதலைகள் தண்ணீரில் மிகவும் ஆபத்தான வேட்டை விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகின்றன. அதனிடம் சிக்கினால்  உயிர் தப்பிப்பது மிகவும் கடினம். முதலையைப் போலவே, மலைப்பாம்பும் மிகவும் ஆபத்தான வேட்டை விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், மலைப் பாம்புகள் அதன் இரையை உயிருடன் விழுங்குபவை. 

மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!

இந்த இரு ஆபத்தான விலங்குகளும் சந்தித்துக் கொண்டால். அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது. இதில் முதலையும், ராட்சத மலைப்பாம்பும் திடீரென தண்ணீரில்  மோதத் தொடங்கின. இந்த வீடியோவை இதுவரை 12 கோடி  பேர் பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடியோவிற்கு ரியாக்ஷன் கொடுத்துள்ளனர்.

சுமார் மூன்று நிமிட வீடியோவில் முதலை தண்ணீரில் பதுங்கியிருப்பதைக் காணலாம். மறுபுறம், இரை தேடும் நோக்கில் கரையில் மலைப்பாம்பு ஒன்றும் உள்ளது. இரை தேடி மெதுவாக தண்ணீருக்குள் இறங்கி  வந்த மைப்பாம்பு முதலையை எதிர்கொண்டது.  இரு விலங்குகளும்  மிகவும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வதை வீடியோவில் காணலாம். அடுத்த கணம் மலைப்பாம்பு முதலையைத் தாக்கியது. எனினும், முதலை தாடை அதனை கவ்விக் கொண்டது. இதற்குப் பிறகு இருவருக்கும் இடையே நடந்த சண்டை மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது.

மேலும் படிக்க | Viral Video: அஸ்ஸாமில் சாலையை ஹாய்யாக கடந்து சென்ற பெரிய்ய்ய்ய மலைப்பாம்பு..!!

வீடியோவை இங்கே பார்க்கவும்:

இந்த வீடியோ யூடியூபில் ஓஜாட்ரோ என்ற சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது, இது இதுவரை சுமார் 12.95 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.  1.79 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News