தளபதி விஜய்யின் பிறந்த நாளில், அவர் பாடிய பாடல்களின் ஒரு தொகுப்பு...

நடிகர் விஜய் பாடிய சில பிரபலமான பாடல்களின் தொகுப்பை இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம். நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

Updated: Jun 22, 2020, 01:41 PM IST
தளபதி விஜய்யின் பிறந்த நாளில், அவர் பாடிய பாடல்களின் ஒரு தொகுப்பு...

தென்னகத்து திரை பிரபலமான தளபதி விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளை (ஜூன் 22) கொண்டாடுகிறார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் தனது ஆளுமை செலுத்தி வரும் விஜய்க்கு உலகெங்கிலும் பல கோடி ரசிகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய புகழ் நாளுக்கு நாள் பெருமளவில் வளர்கிறது. குறிப்பாக தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

அவரது பிறந்தநாளில், ட்விட்டரும் அவரது ரசிகர்களால் ஆர்பரித்து வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #ThalapathyVijay, #HappyBirthdaySir போன்ற போக்குகளை பிரபலமாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அவரது ரசிகர்களின் மகிழ்விற்காக இன்று அவர் பாடிய சில பிரபலமான பாடல்களின் தொகுப்பை நாம் இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம். நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
வரிசை எண் வருடம் பாடல்
1 1994 பாம்பே சிட்டி சுக்கா ரோட்டி
2 1995 ஓரு கடிதம் எழுதினேன்
3 1995 ஐய்யயோ அலமேலு
4 1995 கோத்தகிரி குப்பம்மா
5 1995 தொட்டபெட்டா ரோட்டு மெலே
6 1996 பம்பாய் பார்டி ஷில்பா ஷெட்டி
7 1996 திருப்பதி பொனா மொட்டாய்
8 1996 சிக்கன் கரி
9 1997 5-ஆம் நம்பர் பசிலே
10 1997 ஓர்மிலா ஓர்மிலா
11 1997 ஓ பேபி பேபி
12 1998 டிக் டிக் டிக்
13 1998 மௌரியா மௌரியா
14 1998 காலத்துக்கேத்த கானா
15 1998 நிலவே நிலவே
16 1998 சந்திர மண்டலத்தை
17 1999 நா தம்மடிக்கிற ஸ்டைல பாத்து
18 1999 ஜுதாடி லைலா
19 1999 ரோடுலா ஓரு
20 1999 தங்க நிரத்துக்கு
21 2000 மிசிசிப்பி நதி குலுங்கா
22 2001 என்னோடா லைலா
23 2002 உல்லத்தை கிள்ளாதே
24 2002 கோகோ கோலா (பொடாங்கோ)
25 2005 வாடி வாடி சிடி
26 2012 கூகிள் கூகிள்
27 2013 வாங்கண்ணா வனக்கங்கண்ணா
28 2014 கண்டங்கி கண்டங்கி
29 2014 செல்பி புல்லா
30 2015 யேண்டி யேண்டி
31 2016 செல்ல குட்டி
32 2017 பாப்பா பாப்பா
33 2019 வெரிதானம்
34 2020 குட்டி கதை