VIRAL: விவாகரத்துக்கு பின்னும் பில் கேட்ஸ் கையில் திருமண மோதிரம்

பில் கேட்ஸுடன் (Bill Gates) விவாகரத்து செய்வதாக அறிவிப்பதற்கு குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே மெலிண்டா விவாகரத்திற்கு தயாரான மனநிலையில் இருந்ததாக என்று தகவல்கள் தெரிவித்தன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 24, 2021, 11:10 AM IST
  • மைக்ரோசாப்ட் நிறுவனர் விவாகரத்துக்கு பிறகு முதன் முதலாக சனிக்கிழமை (மே 22) அன்று பொதுவில் தோன்றியுள்ளார்.
  • பில் கேட்ஸ் (Bill Gates) சாம்பல் நிற ஆடையுடன் மற்றும் கருப்பு காலணிகள் அணிந்திருந்தார்.
  • கொரோனா காலம் என்பதால் மாஸ்க் அணிந்திருந்தார்.
VIRAL: விவாகரத்துக்கு பின்னும் பில் கேட்ஸ் கையில் திருமண மோதிரம் title=

உலக பணக்காரர்களில் ஒருவராக உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவருமான பில் கேட்ஸ் (Bill Gates), சுமார் 27 வருடத்திற்குப் பின் தனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்ய முடிவு செய்துள்ளதாக, சில நாட்களுக்கு முன் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பில் கேட்ஸுடன் (Bill Gates) விவாகரத்து செய்வதாக அறிவிப்பதற்கு குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே மெலிண்டா விவாகரத்திற்கு தயாரான மனநிலையில் இருந்ததாகவும், அது தொடர்பாக வழக்கறிஞர்களை சந்திக்கத் தொடங்கினார் என்று தகவல்கள் தெரிவித்தன. 

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் விவாகரத்துக்கு பிறகு முதன் முதலாக சனிக்கிழமை (மே 22) அன்று பொதுவில் தோன்றியுள்ளார். மே 3 அன்று மனைவி மெலிண்டா கேட்ஸிடமிருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்தாலும் பில்லியனர் பில் கேட்ஸ் தனது திருமண மோதிரத்தை இப்போதும் அணிந்திருந்தார். அவரது புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது.65 வயதான பில் கேட்ஸ் (Bill Gates) சனிக்கிழமை மன்ஹாட்டனின் மேற்கு கிராமத்தில் உள்ள கிரீன்விச் ஹோட்டலில் காணப்பட்டார். 

பில் கேட்ஸ் (Bill Gates) சாம்பல் நிற ஆடையுடன் மற்றும் கருப்பு காலணிகள் அணிந்திருந்தார், கொரோனா காலம் என்பதால்  மாஸ்க் அணிந்திருந்தார். கேட்ஸ் தனது 18 வயது மகள் ஹோப் (hoebe), மற்றும் மகளின் காதலன் சாஸ் ஃப்ளின்னுடன் (Chaz Flynn) ஹோட்டலுக்கு வந்தார்.

ALSO READ | Bill Gates விவாகரத்து: 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிகிறார்கள் பில், மெலிண்டா!! காரணம் என்ன?

 

முன்னதாக, கேட்ஸ், ஃபோப் மற்றும் ஃபிளின் ஆகியோர் வெள்ளிக்கிழமை நியூஜெர்சியில் உள்ள நெவார்க் விமான நிலையத்தில், தனியார் ஜெட் விமானத்தில் வந்திறங்கினார்.

பாலியல் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் விசாரணையில் இருந்த ஜஃப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein), பில் கேட்ஸிற்கு இருந்த தொடர்பு குறித்து மெலிண்ட அகவலை கொண்டதாக கூறப்படுகிறது.  எப்ஸ்டீன் இந்த வழக்கு தொடர்பான உயர் மட்ட விசாரணை தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறையில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பில் கேட்ஸ் பல முறை எப்ஸ்டீனை (Jeffrey Epstein) சந்தித்ததாகவும், எப்ஸ்டீன் தங்கியிருந்த நியூயார்க் டவுன்ஹவுஸில் அவருடன் பில் கேட்ஸ் தங்கியிருந்ததாகவும் 2019 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. கேட்ஸுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான சந்திப்புகள் பல முறை நடந்ததாக அந்த அறிக்கை கூறியது.

ALSO READ | உலகின் மிக அழுக்கான மனிதன்; 65 ஆண்டுகளாக குளிக்காத ‘மணம்’ வீசும் மனிதர்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News