ஐக்கிய அரபு நாட்டில் சமீபத்தில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!
கடந்த புதன் அன்று ஐக்கிய அரபு நாட்டில் நடைப்பெற்ற துபாய் ஸ்டார்ஸ் மற்றும் சார்ஜா வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி தான் அது.
இந்தப் போட்டியில் துபாய் ஸ்டார்ஸ் அணி 136 ரன்களை எடுத்தது. 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வாரியர்ஸ் 46 ரன்களுக்கு முழு விக்கெட்டுகளையும் இழந்தது.
வாரியர்ஸ் அணியின் ஆட்டகாரர்கள் பெரும்பாலும் வீனான ரன் அவுட்டால் வெளியேறினர். அனைத்து விக்கெட்டுகளும் சர்சைகளை எழுப்பியுள்ள நிலையில் இரு அணியினரும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த விடியோவினை கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்...
The ICC Anti-Corruption Unit is investigating a match from the Ajman All Stars League recently played in the UAE
Here’s some match footage pic.twitter.com/azU1Cr86e0
— The Cricket Paper (@TheCricketPaper) January 30, 2018