இதுமாதிரி வீடியோவை எப்படி இன்ஸ்ட்டாகிராம் அனுமதிக்கிறது? பார்வையாளர்கள் கேள்வி

சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் "பூனம் பாண்டே" (Poonam Pandey) தனது படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது வழக்கம்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 27, 2019, 01:16 PM IST
இதுமாதிரி வீடியோவை எப்படி இன்ஸ்ட்டாகிராம் அனுமதிக்கிறது? பார்வையாளர்கள் கேள்வி
Pic Courtesy : Instagram/PoonamPandey

புதுடெல்லி: நடிகை பூனம் பாண்டே சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் "இன்ஸ்டா" இத்தகைய வீடியோவை எப்படி அனுமதிக்கிறது? எனக் கேள்வி எழுப்பி பதில் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதே நேரத்தில் இந்த வீடியோவை குறித்து மக்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்தும் வருகின்றனர். 

சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் "பூனம் பாண்டே" (Poonam Pandey) தனது படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது வழக்கம். பூனம் பாண்டே எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர். அவரது சமீபத்திய ஹாட் படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகத் தொடங்கினார். இந்த வரிசையில், பூனம் பாண்டேவின் புதிய வீடியோ இணையத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் அந்த வீடியோவை 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

வீடியோவைப் பகிர்ந்த பூனம் பாண்டே, "நானும் மற்றும் எனது சிறந்த மற்றொரு நண்பண்" என குறிப்பிட்டுள்ளார். வீடியோவில், பூனம் பாண்டே கடல் கரையில் ஒரு நாயுடன் விளையாடுவதைக் காணலாம். இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, சிலர் இதுபோன்ற வீடியோக்களை இன்ஸ்ட்டாகிராம் (Instagram) எவ்வாறு அனுமதிக்கிறது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Me & my second best friend

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

பெரும்பாலும் தலைப்புச் செய்திகளில் இருக்கும் மாடல் நடிகையான பூனம் பாண்டே, தலைப்புச் செய்திகளில் தனது பெயரை எப்படி இடம் பெற வைக்க வேண்டும் என்பது அவர் நன்றாகவே அறிந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் மக்கள் அவர்களைப் பற்றி தொடர்ந்து பேசுவதை தான் பூனம் பாண்டே விரும்புகிறார். அதைதான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். 

பூனம் பாண்டே 2011 உலகக் கோப்பையில் இந்தியா வென்றால், எனது ஆடைகளை எல்லா கழற்றி எறிவேன் எனக்கூறி ஒரு பரபரப்பை ஏற்ப்படுத்தினார். அதன் பின்னர் தான் பூனம் பாண்டே அதிகமாக கவனிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.