பிரசவமான சில மணி நேரத்தில் மீண்டும் "கர்ப்பமான பெண்", அது எப்படி திமிங்கலம்

11 மாதங்களில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் கதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 17, 2022, 09:09 AM IST
  • பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் கர்ப்பமான ஐரிஷ் பெண்
  • 11 மாதங்களில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்
  • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
பிரசவமான சில மணி நேரத்தில் மீண்டும் "கர்ப்பமான பெண்", அது எப்படி திமிங்கலம் title=

வைரல் போஸ்ட்: பிரசவ வலி இந்த உலகிலேயே மிகப்பெரிய வலி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது கடுமையான வலியை எதிர்கொள்கிறாள். அந்த வகையில் இங்கு தற்போது பிரசவம் தொடர்பான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும், உண்மையில் நடந்த சம்பவம் ஆகும்.

பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் கர்ப்பம்!
ஆம், இந்த தலைப்பை கண்டு உங்களுக்கு விசித்திரமாகத் தெரியலாம், ஆனால் அது உண்மையில் நடந்த சம்பவம் ஆகும். லாரன் அஹின்னவாய் என்ற பெண் ஒரு வீடியோவை வெளியிட்டு தனது முழு கதையையும் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த நவம்பர் 27, 2020 அன்று, லாரன் அஹின்னவாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால் மீண்டும் அக்டோபர் 26, 2021 அன்று, மற்றொரு பெண் குழந்தையை அந்த பெண் பெற்றெடுத்தார். உண்மையில் இந்த நிலையை மருத்துவத்தில் ஐரிஷ் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க | போனுக்கு செம சண்டை போடும் குழந்தையும் குரங்கும்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ 

11 மாதங்களில் 2 குழந்தைகளுக்கு தாய் ஆன பெண்
TikTok இல் பகிரப்பட்ட இந்த வீடியோவில், பிரசவத்திற்குப் பிறகு தன் குழந்தையைப் பராமரிக்க அந்தப் பெண் தயாராகிக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தான் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பது அவளுக்கு தெரிய வந்துள்ளது. ஐரிஷ் இரட்டையர்கள் 12 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான வயதில் தாயின் வயிற்றில் இருந்து வெளியே வருகிறார்கள். 11 மாதத்தில் 2 குழந்தைகள் பிறந்தது குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அந்த பெண், இது கடவுள் கொடுத்த மாபெரும் பரிசு என்று தெரிவித்துள்ளார்.

2 குழந்தைகளுக்கு தாயான கதை கேட்டு மக்கள் அதிர்ச்சி!
11 மாதங்களில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் கதை சமூக வலைதளங்களில் தற்போது வெகுவாக வைரலாகி வருகிறது. இந்தக் கதையைப் படித்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். அவரது வீடியோவை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். பலரும் அந்த பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பயனர் நகைச்சுவையாக, 'அடடா..! நீங்கள் நேரத்தை வீணடிக்கவில்லை' என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க | தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News