’அடிவாங்கும் கணவன்’ காதலர் தினத்துக்குப் பிறகான சோகம்..!

காதலர் தினம் முடிந்த அடுத்த நாளே கணவனை மனைவி அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:42 PM IST
’அடிவாங்கும் கணவன்’ காதலர் தினத்துக்குப் பிறகான சோகம்..! title=

பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய தங்களின் பிரியமானவர்களுக்கு வித்தியாசமான முறைகளில் காதலை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். அன்றைய நாள் முழுவதும் கிரீட்டிங் கார்டுகளில் எழுதியும், கிராபிக்ஸ் உள்ளிட்ட டெக்னாலஜியைப் பயன்படுத்தி வித்தியாசமான வரைகலைகளை வரைந்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் பகிர்ந்து பிரியமானவர்களை அசர வைத்தனர்.

மேலும் படிக்க | வைரல் வீடியோ: ஆம்லெட் போடும்போது முட்டையிலிருந்து வெளிவந்த கோழிக்குஞ்சு, ஷாக் ஆன மக்கள்

அதேநாளில் சிங்கிளாக இருப்பவர்கள் தங்களின் வயித்தெறிச்சலை மீம்ஸூகளாக பறக்கவிட்டனர். சிங்கிளாக இருப்பது தான் கெத்து, சிங்கிளாக இருந்தால் எப்படியெல்லாம் இருக்கலாம் என படத்தில் வரும் காமெடி சீன்களையெல்லாம் வெட்டி ஒட்டி இணையத்தில் பரப்பி தங்களின் மனதை தேற்றிக் கொண்டனர். இன்னொரு புறம் திருமணமானவர்கள் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் காதல் பரிசுகளை வழங்கி அன்பை பறிமாறிக் கொண்டனர். அவர்களுக்கும் சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்து பார்ட்னர்களை அசத்தினர்.

ஆனால், அந்த கிப்ட் கொடுப்பது, ரோஸ் கொடுப்பது எல்லாம் ஒருநாள் தான், மறுநாள் எல்லோருடைய வீடுகளிலும் இப்படி தான் இருக்கும் என கூறி, மனைவி ஒருவர் கணவனை அடி வெளுத்து வாங்கும் வீடியோ யூ டியூப் ஷாட்ஸில் வைரலாகியுள்ளது. இதனைப் பார்த்த பல நெட்டிசன்கள் வயிறு குலுங்க சிரித்து, பல பேரின் நிலைமை இப்படி தான் போய் கொண்டிருக்கிறது. காதலர் தினத்துக்கு பிறகு கணவன் மனைவி இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர் என்றெல்லாம் காமெடியாக கமெண்டுகளை அள்ளி வீசியுள்ளனர். வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில் கணவனை மனைவி அடி வெளுக்கிறார். இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க | Snake Vs Rabbit: தன்னை சீண்டிய முயலை பந்தாடிய பாம்பு - வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News