ரகசிய திருமணம் செய்துக்கொண்ட பிரபல நடிகை., வைரல் Pics!

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்திற்கு திருமணம் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இதனை உறுதி ராக்கி சாவந்த் தற்போது உறுதி செய்துள்ளார்.

Updated: Aug 5, 2019, 06:48 PM IST
ரகசிய திருமணம் செய்துக்கொண்ட பிரபல நடிகை., வைரல் Pics!

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்திற்கு திருமணம் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இதனை உறுதி ராக்கி சாவந்த் தற்போது உறுதி செய்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் திருமண அலங்காரத்துடன் ராக்கி புகைப்படங்கள் பகிர்ந்து வந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ராக்கிக்கு திருமணமாகிவிட்டதா என்று அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எனினும் இவையனைத்தும் "ஃபோட்டோ ஷூட் படங்கள். 2020-ல் தான் திருமணம். இன்று எல்லா திருமணங்களும் முடியும் தேதியுடனே நடக்கின்றன. எனவே நான் அதுகுறித்து பயத்துடன் தான் இருக்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது குடும்பத்தினர் மட்டும் பங்குகொண்ட திருமண வைபவம் நடந்து முடிந்துவிட்டதென்று ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நான் பயத்தில் இருந்தேன். எனக்குத் திருமணமாகிவிட்டது. இப்போது அதை உங்களிடம் உறுதி செய்கிறேன். அவர் பெயர் ரிதேஷ். லண்டனில் இருக்கிறார். அவர் திருமணம் முடிந்து அங்கு சென்றுவிட்டார். எனது விசா வந்தவுடன் நானும் சென்றுவிடுவேன் என உண்மையினை உடைத்துள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Good morning sweetheart Fan’s

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Good morning sweetheart fans

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

இந்தியாவில் வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாகத் தொடர்ந்து பணிபுரிவேன். எனக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்க ஆசை. எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகவுள்ளது என நினைக்கிறேன். அற்புதமான கணவரைத் தந்ததற்கு ஏசுவுக்கு நன்றி. பிரபு சாவ்லாவுடனான எனது முதல் பேட்டியிலிருந்தே ரிதேஷ் என் ரசிகர். என்னிடம் வாட்ஸ் அப்பில் பேசி வந்தார். தொடர்ந்து உரையாடினோம். நண்பர்களானோம். ஒன்றரை வருடங்களுக்கு மேல் தொடர்ந்த நட்பு காதலாக மாறியது. அவரது மனைவியாக வேண்டும் என்று ஏசுவிடம் கடுமையாக பிரார்த்தனை செய்தேன். அது இப்போது நிறைவேறிவிட்டது. கடவுள் இதுவரை என்னிடம் கருணையாகவே இருந்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.