பிரபல சருக்கு ஹக்கி வீரங்கனை Alina Zagitova-வின் சாகச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது!
தென் கொரியாவில் நடைப்பெற்ற பியோங்ஹாங் ஒலிம்பிக்கில் தங்கள் வென்ற ரஷ்ய வீராங்கனை Alina Zagitova, அந்நாட்டு வீராங்கனைகளுக்கு மத்தியில், இந்த ஆண்டு தனது விளையாட்டு வாழ்க்கையில் சிறந்த இலக்கினை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷியா நாட்டை சேர்ந்த ஸ்கேட்டிங்க ஹாக்கி வீரங்கனை Alina Zagitova, ஹாக்கி மட்டையினை கையாள்வதில் தனது நிபுணத்துவத்தை நிரூபித்த வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Алина Загитова пробует себя в хоккее. А что, на коньках стоять умеет — осталась клюшка pic.twitter.com/GvjqMtaL3M
— SPORT24.ru (@sport24_ru) December 29, 2018
16-வயது ஆகும் இந்த இளம் வீராங்கனை, ஹாக்கி மட்டையின் விளிம்பில் ஒரு ஹாக்கி பக்கினை வைத்து, அது கீழ் விழாத வகையில் தனது தலையினை சுற்றி கொண்டு வருகின்றார். இந்த செயல்பாடு ஆனது இவரது நிபுணத்துவத்தை வெளிகாட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகு விஷயங்களால் ரசிகர்களை Alina Zagitova கவர்வது இது முதல் முறை அல்ல, முன்னதாக கடந்த நவம்பர் மாதம் மாஸ்கோவில் நடைப்பெற்ற கிரான் ப்ரிக்ஸ் ரோஸ்டெலொக் கோப்பை போட்டியின் போது 80.78 என்ற அசத்தலான புள்ளியினை மிக குறுகிய கால நிகழ்வில் பெற்ற சாதனை படைத்தார். இவரது ஆட்ட நுணுக்கங்கள் இவருக்கு தொடர்ந்து ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இவரது ஹாக்கி மட்டை யுக்தி வீடியோ வெளியானது, நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த முயற்சிக்கு முன்னர் இவர் எத்தனை முறை பயிற்சி பெற்றார் எனவும், பயிற்சியின் போது இவர் சந்தித்த தோல்விகளையும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஜியாகோவாவுக்கு குறிப்பாக வெற்றிகரமானது, பியோங்ஹாங் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றவர், அதேபோல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் முதல் பரிசு பெற்றார்.