லீக்கான சமந்தா-ன் 2-வது திருமண புகைப்படம்; ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை சமந்தாவின் இரண்டாவது திருமண புகைப்படம் இணையத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

Written by - Devaki J | Last Updated : Jul 30, 2018, 04:39 PM IST
லீக்கான சமந்தா-ன் 2-வது திருமண புகைப்படம்; ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை சமந்தாவின் இரண்டாவது திருமண புகைப்படம் இணையத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டார். கல்யாணம் முடிந்த ஒரு சில மாதங்களில் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடா போன்ற மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார்.

தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பெற்றவர். 

கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்றது 'யூ' டர்ன் திரைப்படம். தமிழில் இப்படத்தில் சமந்தா, ஆதி, ராகுல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட இயக்குநர் பவன்குமார் இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகிவருகிறது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இவர் தன்னுடைய ரசிகர்களிடையே அடிக்கடி ட்விட்டர் பக்கத்தில் பேசி வருவார். தற்போது ரசிகர் ஒருவர் சமந்தாவின் போட்டோவை தனியாக போட்டோஷாப்பில் ஒர்க் செய்து திருமணம் செய்தது போல் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். 

இதை ஒருவர் பகிர, இதற்கு சமந்தா, ‘இந்த விஷயம் கடந்த வாரம் நடந்தது. எப்படி இந்த போட்டோ லீன் ஆனது என்று தெரியவில்லை. இது கண்டதும் காதலாக உருவான விஷயம்’ என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். 

 

More Stories

Trending News