லபக்கென்று பாம்பை கவ்வி விழுங்கும் தவளை: மிரள வைக்கும் வைரல் வீடியோ

Viral Video: உலகத்தில் மிக விஷம் நிறைந்த பாம்பை உயிருடன் சாப்பிடும் தவளையின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 3, 2023, 01:18 PM IST
  • பாம்பை உயிருடன் சாப்பிடும் தவளை.
  • தவளையின் வாயிக்குள் பாம்பின் முழு பகுதி.
  • இன்றைய வைரல் வீடியோ.
லபக்கென்று பாம்பை கவ்வி விழுங்கும் தவளை: மிரள வைக்கும் வைரல் வீடியோ title=

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகமாகும். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் கண்டு வருகிறோம். இதில் சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. குறிப்பாக சமீப காலமாக சமூக ஊடகங்களில் பாம்புகளின் வீடியோக்களும் படங்களும் பட்டையைக் கிளப்பி வருகின்றன. 

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என சொல்லுவார்கள். அதாவது பாம்பின் விஷத்தை பார்த்து தான் எல்லோருக்கும் பயம் ஏற்பட்டுள்ளது. பாம்பு கடித்து அதன் விஷம் மனிதனின் உடலுக்குள் ஏறிவிட்டால் மனிதனுக்கு மரணம் கூட ஏற்படும் என்பதால் தான் பாம்பை கண்டு மனிதர்களுக்கு இந்த பயம் உள்ளது. அந்த வகையில் தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த வீடியோ பாம்பு மற்றும் தவளை தொடர்பானது.

மேலும் படிக்க | புத்தாண்டு கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்ட தூய்மை பணியாளர்! கிளைமேக்ஸை தவறவிட வேண்டாம்

பொதுவாக உணவு சங்கிலியை பொறுத்தவரையில் தவளைகளை பாம்புகள் சாப்பிடுவதையே நாம் பார்த்துள்ளோம். கேள்விப்பட்டுளோம். ஆனால், அதே உணவு சங்கியில் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் வகையில் விஷம் நிறைந்த கொடிய பாம்பினை தவளை ஒன்று உயிரோடு விழுங்கும் நிகழ்வு இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தவளை பாம்பை பிடித்து வேட்டையாடுவதையும், பாம்பு அதன் பிடியில் இருந்து வெளியேற முயற்சி செய்து கொண்டிருப்பதையும் காண முடிகின்றது. அதேபோல் அந்த பாம்பால் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதும் தெரிகிறது. 

வீடியோவை இங்கே காணுங்கள்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோ beautiful_new_pixandwild_animal_pix என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. ஒருவர் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அவரையும் படுத்தி எடுக்க மற்றொருவர் இருப்பார் என்ற கருத்தை இந்த வீடியோ எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.  

மேலும் படிக்க | Viral Video: 360 அடி உயர விக்டோரியா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் தொங்கும் பெண்! பகீர் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News