‘கீ’ திரைப்படத்தின் திரில்லரனா Sneak Peek 02 வீடியோ!

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கீ திரைப்படத்தின் திரில்லரனா Sneak Peek 02 வீடியோ வெளியானது!

Updated: May 9, 2019, 10:04 PM IST
‘கீ’ திரைப்படத்தின் திரில்லரனா Sneak Peek 02 வீடியோ!
Screengrab

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கீ திரைப்படத்தின் திரில்லரனா Sneak Peek 02 வீடியோ வெளியானது!

இணைய திருடர்கள், இணைய தகவல் பாதுகாப்பு கருவி போன்ற விஷயங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் கீ. இத்திரைப்படதில் சாக்லேட் நாயகன் ஜீவா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார்.

தற்போதைய காலக்கட்டத்தில் இணைய தகவல் திருடர்களின் பயம் அதிகமாக நிலவிவரும் நிலையில், நாம் எவ்வாறு இணையத்தினை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய புரிதல் அவசியமாகிறது. இந்நிலையில் இணைய பயன்பாட்டினை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கீ’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது

‘கீ’; அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்குகிறார். ஜீவா, நிக்கி கல் ராணி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் இப்படத்தினை தயாரிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் Sneak Peek 02 வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.