கூத்தன் திரைப்படத்தின் “மங்கிஸ்தா கிங்கிஸ்தா” பாடல் வெளியானது!

கூத்தன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “மங்கிஸ்தா கிங்கிஸ்தா” பாடலின் மேக்கிங் வீடியோ வெளியானது!

Last Updated : Aug 26, 2018, 11:32 AM IST
கூத்தன் திரைப்படத்தின் “மங்கிஸ்தா கிங்கிஸ்தா” பாடல் வெளியானது! title=

கூத்தன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “மங்கிஸ்தா கிங்கிஸ்தா” பாடலின் மேக்கிங் வீடியோ வெளியானது!

நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கூத்தன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “மங்கிஸ்தா கிங்கிஸ்தா” பாடலின் மேக்கிங் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சினிமாவில் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்க்கையினை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் கூத்தன். இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார் AL வெங்கி. அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகேந்திர பிரசாத், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் கலக்கப்போவது யாரு புகழ் முல்லை, கோதண்டம் என பலர் நடிக்கின்றனர்.

முன்னதாக இப்படத்தின் அறிமுக பாடலினை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்நிலையில் தற்போது இப்பட்டத்தில் இடம்பெற்றுள்ள “மங்கிஸ்தா கிங்கிஸ்தா” பாடலின் மேக்கிங் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்பாடலினை பன்முக கலைஞர் டி ராஜேந்திர், சென்பகராஜ், பேபி ஷாஜினி ஆகோயோர் பாடியுள்ளனர். ரோகேஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாலா ஜி இசையமைத்துள்ளார்.

Trending News