அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஹாலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து டிரம்பின் பிரசார குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதும் தலைப்பு செய்திகளில் இடம் பெறுவது வழக்கம். ஆனால் இப்போது அவர் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்ற முக்கியக் காரணம், அவரது அரசியல் பேச்சு அல்ல, அவரது வீடியோ ஒன்று தான் காரணம்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது அரசியல் எதிரியான ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது உக்ரைனில் விசாரணை நடத்த அந்த நாட்டுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. இது தொடர்பாக டிரம்ப் மீது பதவி நீக்க விசாரணை நடத்தி வரும் அமெரிக்க நாடாளுமன்ற புலனாய்வு குழு அவர் மீதான புகார்களை முறைப்படி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் பதவி நீக்க விசாரணையை நடத்தி வரும் ஜனநாயக கட்சியினரை அச்சுறுத்தும் தோனியில் ஜனாதிபதி டிரம்பை, ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் வில்லன் தானோஸ் போல் சித்தரித்து, டிரம்பின் பிரசார குழு வீடியோ ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.
House Democrats can push their sham impeachment all they want.
President Trump's re-election is . pic.twitter.com/O7o02S26nS
— Trump War Room (Text TRUMP to 88022) (@TrumpWarRoom) December 10, 2019