Viral Video: இது பறவை இல்லை சத்தியமா மீன் தான்.. இணையவாசிகளை திகைக்க வைத்த பறக்கும் மீன்!

Viral Video of Flying Fish: வன வாழ்க்கையைப் போலவே கடல் வாழ்க்கையும் சுவாரஸ்யங்கள் நிறைந்தது. கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பான வித்தியாசமான வீடியோக்களுக்கு என தனி மவுசு உண்டு. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 18, 2023, 05:32 PM IST
  • விமானத்துடன் போட்டி போடுவதைப் போல மீன் மிக வேகமாக பறக்கும் வீடியோ
  • சில மீன் வகைகள் கடலுக்கு மேலே மின்னல் வேகத்தில் பாய்ந்து செல்கின்றன.
  • கடல் பகுதிகளில், கடல் மட்டத்தில் இருந்து பல அடி உயரத்திற்கு துள்ளிக் குதிக்கும் பறக்கும் மீன்கள் உள்ளன.
Viral Video: இது பறவை இல்லை சத்தியமா மீன் தான்.. இணையவாசிகளை திகைக்க வைத்த பறக்கும் மீன்! title=

நமது அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட சமூக ஊடகங்கள் தனி உலகமாக இயங்கி வந்தாலும், பல வினோதமான, ஆச்சர்யமான, அதிர்ச்சியான, திகிலான என பல்வேறு வகையான பல தரப்பட்ட விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான அமசங்களையும் கொண்டு உள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகும் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

வன வாழ்க்கையைப் போலவே கடல் வாழ்க்கையும் சுவாரஸ்யங்கள் நிறைந்தது. கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பான வித்தியாசமான வீடியோக்களுக்கு என தனி மவுசு உண்டு. பார்ப்பவரை பதற வைக்கும் மிருகங்களின் வேட்டை வீடியோ அனைவரையும் இணையத்தை நோக்கி ஈர்க்கிறது என்றால், அழகிய கடல் வாழ் விலங்குகளின் வீடியோக்கள் மனதை மயக்கி ஈர்க்கின்றன. அந்த வகையில் பறக்கும் மீன் ஒன்றின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கடல் பகுதிகளில், கடல் மட்டத்தில் இருந்து பல அடி உயரத்திற்கு துள்ளிக் குதிக்கும் பறக்கும் மீன்கள் உள்ளன. கடலின் ஆழத்தில் வேகமாக நீந்திச் செல்லும் இந்த மீன்கள், கடல் நீரை துளைத்துக் கொண்டு, ஒரு ராக்கெட் போல கடல் மட்டத்திற்கு மேலே சீறிக் கிளம்புவதை பார்க்க மிகவும் அதிசயமாக இருக்கும்.

மேலும் படிக்க | Dolphin Viral Video: வானவில்லைத் தொடும் டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரல்

விமானத்துடன் போட்டி போடுவதைப் போல மீன் மிக வேகமாக பறக்கும் வீடியோவை கீழே காணலாம்:

 

 

பொதுவாக, தங்களை உணவாக கொள்ள வரும் இந்த எதிரி மீன்களிடம் இருந்து தப்பவே, சில மீன் வகைகள் கடலுக்கு மேலே மின்னல் வேகத்தில் பாய்ந்து செல்கின்றன என கூறப்படுகிறது. கடல் மட்டத்தில் மிதக்கும் ஒரு வகை நுண்ணியிர்களை உணவாகக் கொள்ளும் இந்த பறக்கும் மீன்ககள், இரையை தேடவும் கடல் மட்டத்திற்கு மேலே பாய்கின்றன என்றும் கூறப்படுகிறது. சர்வதேச அளவில், 40க்கும் மேற்பட்ட பறக்கும் மீன் வகைகள் உள்ளன. இவை, பறப்பதற்கு ஏற்றவாறு இறக்கை போன்ற உறுப்புக்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன என்ற தகவல் மிகவும் ஆச்சர்யத்தை கொடுக்கிறது அல்லவா.

மேலும் படிக்க | Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவர்! யானை மரத்தை சாய்த்த காரணம் தெரியுமா!
 

மேலும் படிக்க | 'தம்பி...போய் ஓரமா நில்லு': சீண்டிய காண்டாமிருகத்தை வெச்சி செஞ்ச யானை, வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News