'பேட்ட' திரைப்படத்தில் 'ஜித்து'-வாக நடிக்கின்றார் விஜய்...

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி 'ஜித்து' என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Dec 4, 2018, 06:33 PM IST
'பேட்ட' திரைப்படத்தில் 'ஜித்து'-வாக நடிக்கின்றார் விஜய்...
Pic Courtesy: twitter/@sunpictures

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி 'ஜித்து' என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்துருக்கிறார் அனிருத். 

பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. எனினும் அதிகாரப்பூர்வ தகவகள் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி 'ஜித்து' என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மரண மாஸ்' என்னும் பாடலின் லிரிக்கெல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடல் 4.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.