Viral Video: மீன் பிடிக்கும் போது போனஸாக கிடைத்த முதலை; நடந்தது என்ன...

சமூக ஊடக உலகத்தில் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும்,  நம்மை வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது அதிர்ச்சி அளிக்கக்க்கூடிய அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 12, 2022, 06:22 PM IST
Viral Video: மீன் பிடிக்கும் போது போனஸாக கிடைத்த முதலை; நடந்தது என்ன... title=

சமூக ஊடக உலகத்தில் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும்,  நம்மை வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது அதிர்ச்சி அளிக்கக்கூடிய அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகின்றன.

பொதுவாக இணைய தளத்தில், காட்டு விலங்குகள் தொடர்பான காணொளிகள் பதிவிடப்பட்ட உடனேயே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. 

இணைய தளத்தில் பகிரப்படும் வீடியோக்களில், சில நேரங்களில் இரண்டு விலங்குகள் பரஸ்பரம் அன்பைப் பொழிவதைக் காணலாம். சில சமயங்களில் பரஸ்பரம் உக்கிரமாக சண்டையிடுவதைக் காணலாம். அதே சமயத்தில் சில எதிர்பாராத தாக்குதல்களில் மயிரைழையில் தப்பிக்கும் சம்பவங்களும் நடக்கும்.

முதலைகள்  நீரிலும் நிலத்திலும் கடுமையாக தாக்கும் திறன் பெற்றவை. வாய்ப்பு கிடைத்தவுடன் எந்த மிருகத்தையும் வெற்றிகரமாக தாக்கி இரையாக்கி விடும். அதன் பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினம். இந்நிலையில், தற்போது மீண்டும் முதலையின் ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் மிகவும் வரைலாகி . வருகிறது.

மீன் பிடிக்க போனவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, மீனை வெளியே இழுக்கும் போது, ​​அதோடு ஒரு முதலையும் வந்தது. மீன்பிடிக்கச் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக முதலை தாக்காததால் மீன்களை பிடித்துச் சென்றனர். இந்த காணொளி ஆஸ்திரேலியாவில் எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Viral Video: பாம்பிடம் சிக்கித் திணறும் கன்றுக் குட்டியின் அலறல்; பதற வைக்கும் காட்சிகள்

வைரல் வீடியோவை கீழே காணலாம்:

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஆஸ்திரேலியாவின் கக்காடுவில் உள்ள Chells Crossing ஏரியில் ஒரு சிறுவன் தனது தந்தையுடன் மீன்பிடிக்கச் சென்றதைக் காணலாம். இருவரும் சேர்ந்து மீன்பிடி கம்பியால் மீன் பிடிக்க முயன்றனர். மீன்களும் அவர்களின் வலையில் சிக்கியது, அவர்கள் மீன்களை வெளியே எடுக்கத் தொடங்கியவுடன், முதலையின் கண்கள் அதன் மீது விழுந்தன. அப்போது  மீனின் பின்னால் வந்த முதலை கடைசி வரை துரத்திக்கொண்டே இருந்தது.

மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News