சிறுத்தையுடன் ‘ஒரு போர்வைக்குள்’ உறங்கிய நபர்; இணையத்தை அதிர வைத்த வீடியோ!

மூன்று சிறுத்தைகள், ஒரு நபருடன், நிம்மதியாக ஒரே  போர்வைக்குள் படுத்துக் கொண்டிருப்பதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 24, 2022, 02:50 PM IST
சிறுத்தையுடன் ‘ஒரு போர்வைக்குள்’ உறங்கிய நபர்;  இணையத்தை அதிர வைத்த வீடியோ!  title=

மூன்று சிறுத்தைகள், ஒரு நபருடன், நிம்மதியாக ஒரே  போர்வைக்குள் படுத்துக் கொண்டிருப்பதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோ 2019 இல் தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோன்டைனில் உள்ள சிறுத்தை வளர்ப்பு மையத்தில் படமாக்கப்பட்டது. சிறுத்தை வளர்ப்பு மையத்தில் தன்னார்வலராக பணியாற்றிய டால்ஃப் வோல்கரின் அனுபவத்தை வீடியோ காட்டுகிறது.

தென்னாப்பிரிக்காவில் வோல்கர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சிறுத்தை வளர்ப்பு மையமத்தில் அங்கிருந்த சிறுத்தைகளுடன் மூன்று சிறுத்தைகளுடன் சில இரவுகளைக் கழிக்க சிறப்பு அனுமதியைப் பெற்றார் அவர்.

மேலும் படிக்க | Viral Video: அஸ்ஸாமில் சாலையை ஹாய்யாக கடந்து சென்ற பெரிய்ய்ய்ய மலைப்பாம்பு..!!

வீடியோவைப் பகிர்ந்த அவர்,  ‘சிறுத்தைகளுக்கு ஜில்லென்ர தரை பிடிக்குமா  அல்லது சூடான போர்வைக்குள் ஒன்றாக படுத்து தூங்க பிடிக்குமா ?  என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சிறைபிடிக்கப்பட்ட சிறுத்தைகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள சிறுத்தை வளர்ப்பு மையங்களில் பிறந்து வளர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

இனப்பெருக்கத்திற்காக அவை வளர்க்கப்படுவதால் அவை அனைத்தும் மிகவும் அடக்கமானவை என அவர் கூறுகிறார். அவை குட்டிகளாக இருக்கும்போது, ​​​​அவற்றை உன்னிப்பாகக் கண்காணிக்க முடியும் என்கிறார். அதனை அன்பாக பராமரிக்கும் நபரை அதனால் புரிந்து கொள்ள முடியும் என்கிறார்.

எதிர்காலத்தில் இந்த சிறுத்தைகளில் ஒன்றை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுவதற்கான திட்டம் உள்ளது. கடந்த தன்னார்வத் தொண்டுகளின் போது சிறுத்தையை வளர்க்கும் பணியில் இருந்த எனக்கு,  சிறுத்தைகளுடன் எனது இரவுகளைக் கழிக்க எனக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

வைரலாகும் யூட்யூப் வீடியோவை இங்கே பாருங்கள்:

சிறுத்தையுடன் இரவுகளை கழித்த அந்த நபர்,  விலங்கியல் பட்டம் பெற்ற ஒரு விலங்கு ஆர்வலர். விலங்குகளின் நடத்தையால் ஈர்க்கப்பட்டு அவற்றி மன நிலையை ஆராய்ந்து பார்ப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான பணி என யூடியூப் சேனலில்  குறிப்பிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க |  Snake Vs Rabbit: தன்னை சீண்டிய முயலை பந்தாடிய பாம்பு - வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News