புத்தர் சிலையை பார்த்ததும் பிரமித்து போன அணில்! வைரல் வீடியோ..

Viral Video Of Squirrel : ஒரு அணில், புத்தர் சிலையை பார்த்தவுடன் பிரமித்து போன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Oct 14, 2024, 05:27 PM IST
  • புத்தர் சிலையை தொட்டவுடன் அசந்து போன அணில்..!
  • அப்படியே மெய்மறந்து நிற்கிறது..
  • வைரல் வீடியோ..
புத்தர் சிலையை பார்த்ததும் பிரமித்து போன அணில்! வைரல் வீடியோ.. title=

Viral Video Of Squirrel : மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் பெரிய அளவில் ஒன்றும் வித்தியாசம் இல்லை. அவற்றிற்கு 5 அல்லது 4 அறிவு, நமக்கு 6 அறிவு அவ்வளவுதான். சமயங்களில், அந்த மிருகங்கள் கூட அந்த அளவிற்கு கொடூர எண்ணங்கள் படைத்தவையாக இருக்காது. ஆனால் நாமோ, அதை விட கொடூர மனம் படைத்தவர்களாக இருப்போம். ஒரு சில மிருகங்கள் செய்யும் விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். தான் செய்யும் விஷயங்கள் மனிதர்களை கவரும் என்பதை தெரியாமலேயே அவை இதனை செய்கின்றன. அந்த வகையில், ஒரு குட்டி அணில் செய்யும் சேட்டைகள்தான் தற்போது வைரலாகி வருகிறது. 

மெய் மறந்து போன அணில்!

மிகச்சிறிய மிருகங்களுள் ஒன்று, அணில், மரத்திற்கு மரம் தாவி, பழத்தை பறித்து சாப்பிட்டு வாழும் இந்த உயிரினங்கள் மிகவும் சுறுசுறுப்பானவை. எப்போதாவது இதை நம் வீட்டு மொட்டை மாடியில் பார்த்திருப்போம். எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் இவை, நாம் அருகில் சென்றதும் சர்ரென எங்காவது சென்று மறைந்து கொள்ளும். ஆனால், நன்கு பயிற்சி கொடுக்கப்பட்ட அணில்கள் மனிதர்களிடமும் ஒட்டி உறவாடி வாழ்கின்றன. அந்த வகையில், 

அணில ஒன்று, ஒருவர் கையில் இருக்கும் புத்தர் சிலையை பார்த்து, மெய் மறந்து அசந்து போய் நிற்கிறது.பின்னர், என்னவோ சிலையை வழிப்படுவது போல  அந்த நபரின் கையிலேயே அதுவும் சிலையாக மாறி நிற்கிறது. அணிலின் இந்த செயல் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. 

ஒரு சிலர், அந்த அணில் சம்சார பந்தத்தை விடுத்து, துறவறம் சென்றதாக நகைச்சுவை செய்ய, இன்னும் சிலர் “சிறிது நேரத்தில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும் பாருங்கள்..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். பல மில்லியன் வியூஸ்களை கடந்திருக்கும் இந்த வீடியோ தற்போது 1,68,219 லைக்ஸ்களை கடந்து வருகிறது. 

மேலும் படிக்க | Viral Video: பெண்ணின் தலையில் விழுந்த சின்டக்ஸ் டேங்க் - இப்படி கூட நடக்குமா?

மேலும் படிக்க | இவ்வளவு டீசண்டா ‘மே ஐ கம் இன்’ என்று கேட்க முடியுமா? ஹோட்டலுக்கு வெளியில் நிற்கும் மான்களின் வீடியோ வைரல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News