Viral Video: பெண்ணின் தலையில் விழுந்த சின்டக்ஸ் டேங்க் - இப்படி கூட நடக்குமா?

Viral Video: சாலையில் நடந்துசெல்லும் பெண் ஒருவரின் தலையில் திடீரென தண்ணீர் டேங்க் விழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 14, 2024, 03:27 PM IST
  • இந்த வீடியோ X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
  • சுமார் 19 லட்சம் வியூஸ் தற்போது வந்துள்ளது.
  • இந்த வீடியோ பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது.
Viral Video: பெண்ணின் தலையில் விழுந்த சின்டக்ஸ் டேங்க் - இப்படி கூட நடக்குமா? title=

Trending Viral Video: இந்தியாவில் மக்களால் பல்வேறு விதமான சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாட்ஸ்அப், பேஸ்புக், X, இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப், ஸ்னாப்சேட் உள்ளிட்ட பல தளங்களை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். வீட்டில் கல்லூரி படிக்கும் பிள்ளைகள் இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட்டில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்றால் பெற்றோர், வயதானோர் யூ-ட்யூப், பேஸ்புக், வாட்ஸ்அப்பை அதிகம் பயன்படுத்துகின்றனர். 

இவை அனைத்திலும் வீடியோக்கள், மீம் புகைப்படங்கள் மிக அதிகமாக பகிரப்படும். அதாவது, எழுத்து சார்ந்த பதிவுகளை விட புகைப்படம், வீடியோ சார்ந்த பதிவுகள் அதிக மக்களை சென்றடைகிறது, மக்களை எளிதாக கவர்கிறது எனலாம். யூ-ட்யூப் ஷார்ட்ஸ் தொடங்கி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வரை வெறும் 1 நிமிடத்திற்குள் வீடியோவை பதிவேற்றும் வசதியை கொண்டுள்ளன. இவை அனைத்தும் இதுபோன்ற வீடியோ பதிவுகளை ஊக்குவிக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டது. 

வைரலாகும் எண்ணற்ற வீடியோக்கள்

இதுபோன்று சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் நெட்டிசன்களிடம் வைரல் ஆக பரவுவது வழக்கம்தான். விலங்குகளின் க்யூட் வீடியோ தொடங்கி மனிதர்களின் வினோத வீடியோக்கள் வரை எண்ணற்ற வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும். அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற அதிக இணையவாசிகள் இருக்கும் நாட்டில் எண்ணற்ற வீடியோக்கள் தினந்தினம் அதிக வியூஸ்களை பெறுகின்றன எனலாம். தற்போது வெளியாகும் வீடியோதான் வைரலாகும் என்றில்லை, இரண்டு, மூன்று ஆண்டுகள் பழைய வீடியோக்கள் கூட திடீர் திடீரென வைரலாகும் எனலாம்.

மேலும் படிக்க | இவ்வளவு டீசண்டா ‘மே ஐ கம் இன்’ என்று கேட்க முடியுமா? ஹோட்டலுக்கு வெளியில் நிற்கும் மான்களின் வீடியோ வைரல்!

அப்படியிருக்க தற்போது இந்தியாவில் எங்கோ நடந்த சம்பவத்தின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. இது இன்ஸ்டாகிராம், பேஸ்புக், X தளம் உள்ளிட்டவற்றில் நெட்டிசன்களால் வியந்து பார்கப்படுகிறது. 

அதிர்ச்சி வீடியோ

ஒரு மத்திய வயது பெண் ஒரு வீட்டில் இருந்து வெளியே வந்து சிறிய சாலையை கடக்கிறார். மிக இயல்பாக சென்றிருக்கொண்டிருக்கும் வீடியோவில் திடீரென பார்ப்போரை அதிர்ச்சியில் உள்ளாக்கும் வகையில், வானத்தில் இருந்து தண்ணீர் டேங்க் அவர் தலை மீது விழுகிறது. ஆனால், நல்வாய்ப்பாக அவருக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. அந்த டேங்க் வந்த வேகத்தில் அடியில் உடைந்ததாக தெரிகிறது.

அந்த டேங்கின் மேல்பகுதியின் வழியாக அந்த பெண் நிதானமாக எழுந்தார். அவர் மீது டேங்க் விழுந்த உடன் அருகில் இருந்தவர்கள் உதவிக்கு ஓடோடி வந்தார். டேங்க் விழுந்த வீட்டின் மாடியை பார்த்த அவர்கள் திட்டுவதை வீடியோவில் காண முடிகிறது. அந்த தண்ணீர் டேங்க் எப்படி, பறந்து வந்து அங்கு விழுந்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது. அவர் உயிர் தப்பித்தாலும் கூட தலையில் காயம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இந்த வீடியோ X தளத்தில் @hemantbatra0 என்ற பதிவர் நேற்று பதிவிட்டுள்ளார். நேற்றிரவு 11 மணிக்கு மேல் பதிவிட்ட நிலையில் தற்போதே 19 லட்சம் வியூஸை பெற்றிருக்கிறது. இதன்மூலமே, இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணரலாம். 

மேலும் படிக்க | Viral Video: கோஸ்ட் ரைடர் கார்... தீப்பிடித்து குடுகுடுவென ஓடியதால் பதற்றம் - தலைத்தெறித்து ஓடிய மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News