பெட்டில் தான் தூங்குவேன்! அடம்பிடித்து தூங்கிய குட்டி யானை!

யானைக்குட்டி ஒன்று பெட் மீது படுத்திருந்தவரை எழுப்புவதற்காக போராடும் காட்சி இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 12, 2022, 06:45 PM IST
  • தூங்கிக்கொண்டு இருப்பவரிடம் சேட்டை செய்யும் குட்டி யானை.
  • பெட்டில் தூங்க ஆர்ப்பாட்டம்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
பெட்டில் தான் தூங்குவேன்! அடம்பிடித்து தூங்கிய குட்டி யானை! title=

குழந்தைகள் அதற்கு சொந்தமாக வைத்திருக்கும் ஒரு பொருளை மற்றவர்கள் எடுத்துக்கொண்டால் எப்படி ஆர்ப்பாட்டம் செய்து அதனை திரும்ப பெற விரும்புமோ அதேபோல யானைக்குட்டி ஒன்று அதற்கு சொந்தமான பெட் மீது படித்திருந்த வாலிபரை விரட்ட முயலும் காட்சி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.  இணையங்களில் நிரம்பியுள்ள பல அற்புதமான காட்சிகள் பெரும்பாலும் விலங்குகளின் குறும்புத்தனமான செயல்களாக தான் இருக்கின்றன.  தற்போது இணையத்தில் பரவி வரும் இந்த காட்சி பலருக்கும் மன அமைதியை தருவதாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க | வம்பிழுத்தவரை வகுந்தெடுத்த நாய் - வைரல் வீடியோ

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில், டாக்டர்.சாம்ரத் கவுடா ஐஎஃப்எஸ் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், வேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் குட்டியானை ஒன்று கதவுகளை வேகமாக திறந்துகொண்டு வேலியை விட்டு வெளியேறுகிறது.  வேலிக்கு வெளியே ஒரு ஊதா நிற பெட்டின் மீது வாலிபர் ஒருவர் படுத்து கொண்டிருக்கிறார், கதவை திறந்துகொண்டு வெளியேறிய யானைக்குட்டி வேகமாக அந்த நபரை நோக்கி ஓடுகிறது.  அந்த பெட்டின் மீது தனது முன்னங்கால்களை வைத்துக்கொண்டு அதன் மீது படுத்திருப்பவரை தனது தும்பிக்கையால், கால்களாலும் உதைத்து கீழே தள்ள முயல்கிறது.  

 

பின்னர் அவரை ஒருவழியாக கீழே தள்ளி பெட்டின் மீது யானை உட்கார்ந்து கொள்கிறது, மீண்டும் அவர் பெட் மீது உட்கார அவரை கீழே தள்ளும் நோக்கில் சென்ற யானை செடிகளின் மீது முட்டி கொள்கிறது.  அதன் பின்னர் கோபித்துக்கொண்டு சென்ற அந்த குட்டியானையை அந்த நபர் சமாதானம் செய்து கொண்டு வந்து அந்த பெட்டின் மீது படுக்க வைப்பதுடன் வீடியோ முடிவடைகிறது.  இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த இந்த வீடியோவிற்கு இதுவரை பதினோறாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது.

மேலும் படிக்க | ஓனருக்கே டிவிஸ்ட் கொடுத்த நாய் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News