கவனம் மக்களே! வேலையை விட்டு தூக்கியதால் ஆசிட் வீச்சில் ஈடுபட்ட நபர் - வைரலாகும் வீடியோ

Noida Car Acid Attack Video: தான் வேலை பார்த்து வந்த இடத்திற்கு காலையில் சென்றபோது, தனக்கு வேலையில்லை என திடீரென சொன்னதால், 25 வயதான நபர் ஆசீட் வீச்சில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : Mar 18, 2023, 04:52 PM IST
  • அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
  • வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
  • இச்சம்பவம் கடந்த புதன்கிழமை (மார்ச் 15) நடந்துள்ளது.
கவனம் மக்களே! வேலையை விட்டு தூக்கியதால் ஆசிட் வீச்சில் ஈடுபட்ட நபர் - வைரலாகும் வீடியோ

Noida Car Acid Attack Video:​ ஆசிட் ஊற்றி கார்களை நாசம் செய்யும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் பின்னணியில் அந்த நபர் ஒரு கார் வாஷர் என்றும், அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, கோபத்தில் அங்கிருந்த கார்கள், வாகனங்கள் மீது ஆசிட் ஊற்றி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நொய்டா, செக்டார்-75 இல் நடந்துள்ளது என கூறப்படுகிறது. 

திடீர் லே-ஆஃப்

கடந்த புதன்கிழமை (மார்ச் 15) காலை 9:15 மணியளவில் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், கார்களை சேதப்படுத்துவதை, அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்கள் இந்த சம்பவம் குறித்து அறிந்தனர்.

அந்த நபர், ஒரு பழிவாங்கும் செயலாக இந்த சம்பவத்தை செய்துள்ளார் என போலீார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நொய்டாவில் உள்ள செக்டார் 75ல் உள்ள மேக்ஸ்பிளிஸ் ஒயிட் ஹவுஸ் சொசைட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேலும் படிக்க | மக்களே உஷார்! 126 நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் கொரோனா பாதிப்பு

டஜன் கார்கள் சேதம்

நொய்டா செக்டார் 113 காவல் நிலைய போலீசார் கூறுகையில்,"குற்றம் சாட்டப்பட்ட ராம்ராஜ், அந்த பகுதியில் அவர் கார்களை சுத்தம் செய்து பணியில் இருந்தார். அப்பகுதியினர் அவரது பணியின் தரத்தில் மகிழ்ச்சியடையவில்லை. எனவே அவர்கள் அவரை வேலையைவிட்டு நீக்க முடிவு செய்தனர். இருப்பினும், புதன்கிழமை, அவர்  மேக்ஸ்பிளிஸ் ஒயிட் ஹவுஸ் சொசைட்டிக்கு வந்துள்ளார். தான் வேலையில் நீக்கப்பட்ட செய்தியை அறந்ததும், சுமார் ஒரு டஜன் கார்கள் மீது ஆசிட் ஊற்றி சேதப்படுத்தினார்" என்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு சுமார் 25 வயது இருக்கும் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக நொய்டா காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது ஐபிசி பிரிவு 427 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் உள்ளூர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் ஊழியர்களுக்கு 2 மாஸ் அறிவிப்புகள், தயாராகும் அரசு!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News