சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்த பர்சானா என்ற பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான ரசிகர்களைக் நடிகர் அஜித் (Ajith Kumar) கொண்டுள்ளார். இவர் தன்னுடைய அடுத்த படமான வலிமை (Valimai) படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இதற்கிடையில் அஜித்தின் வீட்டின் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்திருக்கிறார். இது தொடர்பாக் தகவல் அறிந்த போலீசார் அவரிடம் காவல்துறை அதிகாரிகளை சந்த்தித்து முறையிடுமாறு கேட்டுக் கொண்டனர். இதனிடையே அப்பெண் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். உடனே போலீசார் தண்ணீர் ஊற்றி அழைத்து சென்றனர். மேலும் தற்போது அந்த பெண் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
ALSO READ | வலிமை படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிறது; படக்குழு கூறுவது என்ன
இந்நிலையில் அஜித் வீட்டின் முன் தீக்குளிப்பதற்கு முன்பு அந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. மேலும், அந்த வீடியோவில் அந்த பெண் கூறியதாவது, என் மரணத்திற்கு நடிகர் அஜித் தான் முழுக்க முழுக்க காரணம் ஆவார் என்று கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
யார் அந்த பெண்
சென்னையின் பிரபல மருத்துவமனையில் முன்னாள் ஊழியர் பர்சானா ஆவார். இவர் முன்னதாக நடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும், இதன் காரணமாக அவர் தனது வேலையை இழந்ததாகக் குற்றம் சாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தற்போது பர்சானா விசாரணையில் உள்ளார் என்கிற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR