ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர் தலையில் பால் டம்லருடன் சீராக குளத்தின் குறுக்கே நீந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், அமெரிக்காவில் நீச்சல் வீராங்கனை ஒருவர், தலையில் பால் நிரம்பிய கண்ணாடி டம்ளரை வைத்து கொண்டு லாவகமாக நீச்சலடித்து எதிர்கரையை தொடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த 23 வயது நீச்சல் வீராங்கனையான கேட்டி லெடெக்கி (Katie Ledecky) என்பவர், ஒலிம்பிக் போட்டியில் 5 முறை தங்கப்பதக்கத்தையும், 15 முறை உலக சாம்பியன் நீச்சல் போட்டியில் தங்கபதக்கத்தையும் வென்றவர். தற்போது, நீச்சல்குளம் ஒன்றில், மில்க் ஷேக் ஊற்றப்பட்ட ஒரு கண்ணாடி டம்ளரை தலையில் சுமந்தப்படி, ஒரு துளி கூட சிந்தாமல் எதிர்கரையை நீந்தி கடக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், என் வாழ்க்கையில் மிக சிறந்த நீச்சல்களில் ஒன்று (விவாதத்திற்கு விடுகிறேன்). ஒரு துளி கூட சிந்தாமல் உங்களால் என்ன செய்ய முடியும் என்ற தலைப்பிட்டு கேட்டி பதிவிட்ட இந்த வீடியோ சுமார் 27 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை எட்டியுள்ளது.
ALSO READ | Watch: கொஞ்சி விளையாடும் எலி - பூனையின் குறும்பு வீடியோ வைரல்...!
லெடெக்கின் அசாத்திய திறமையை கண்டு வாயடைத்து போன நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நெட்டின் ஒருவர், என் கையில் கண்ணாடி டம்ளரை பிடித்து கொண்டு ஒரே இடத்தில் நிற்க முடியவில்லை, அதை கொட்டாமல் இருக்க முடியவில்லை. அதனால் நான் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டதாக உணர்கிறேன் என நகைச்சுவையாக பதிவிட்டார்.
இது வழக்கமாக சமூகவலைதளங்களில் கவனத்தை பெறுவதற்கான செய்த சாகசம் இல்லை. டிக்டோக் செயலியில் மிகவும் பிரபலமான #GotMilkChallenge யின் ஒரு பகுதி தான் என வீராங்கனை கேட்டி தெரிவித்திருந்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரளாக பரவி வருகிறது.