புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இவன! வைரலாகும் சிறுவனின் வீடியோ..!

ஆந்திர மாநிலத்தின் ஹனுமந்த் என்கிற சிறுவன் நான் வைத்திருந்த பென்சிலை இவன்  திருடிவிட்டான், அதனால் இவன் மீது கேஸ் போடுங்கள் என்று கூறியுள்ளான்.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 26, 2021, 09:23 PM IST
புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இவன! வைரலாகும் சிறுவனின் வீடியோ..!

ஆந்திரா: மழலைகள் செய்யும் குறும்பு செயலுக்கென்றே பல ரசிகர் கூட்டம் உள்ளது.  குழந்தைகளின் குறும்புத்தனமான விஷயங்கள் பலவும் இணையவாசிகளை கவர்ந்து விரைவில் ட்ரெண்டாகிவிடும்.  அதுபோல தான் ஒரு சிறுவனின் விநோத செயல் ஒன்று அனைவரையும் கவர்ந்து இணையத்தை வட்டமடித்து வருகின்றது.

ALSO READ திருமண பரிசாக மகளுக்கு மகளிர் விடுதியை கட்டி கொடுத்த தந்தை!

ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெத்தகடுவூர் என்ற பகுதியை சேர்ந்தவன் ஹனுமந்த் என்கிற சிறுவன்.  இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான்.  அந்த சிறுவன் தன்னுடன் சக மாணவர்களை அழைத்து கொண்டு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளான்.

சிறுவர்கள் கூட்டமாக காவல் நிலையத்திற்கு வருவதை கண்ட போலீசார் சற்று அதிர்ந்தனர்.  ஆனால் சிறிது நேரத்தில் அந்த அதிர்ச்சி அனைவர்க்கும் நகைச்சுவையை அளித்தது.  போலீசார் அந்த சிறுவர்களிடம் எதற்காக வந்தீர்கள் என்று விசாரித்தனர்.  அப்போது ஹனுமந்த் சகா மாணவனை காமித்து இவன் நான் வைத்திருந்த பென்சிலை திருடிவிட்டான்.  அதனால் இவன் மீது கேஸ் போடுங்கள் என்று கூறினான்.

 

மேலும் சீரியசாக தனது முகத்தை வைத்துக்கொண்டு சிறுவன் காவல் நிலையத்தில் அளித்த புகார் அங்கிருந்த காவலர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது.  பின்னர் ஒருவழியாக அந்த சிறுவனை சமாதானம் செய்ததோடு, அந்த இரு சிறுவர்களையும் கைக்குலுக்க செய்தனர்.  இந்த சம்பவம் குறித்து கூறிய போலீசார், "சிறுவர்களின் இந்த செயல் எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.  காவல் நிலையத்திற்கு யார் வேண்டுமானாலும் தயங்காமல் வந்து புகார் அளிக்கலாம், மேலும் காவல்துறையினர் சிறப்பாக செயல்படுகிறோம் என்பதற்கு இந்த சிறுவர்களின் செயல் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது" என்று தெரிவித்தனர்.

ALSO READ தாய்லாந்தில் களைகட்டப்போகும் கஞ்சா பீட்சா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News