வீடியோ: டார்கெட் முடிக்காத ஊழியர்களை சாலையில் நாய் போல நடத்திய நிறுவனம்

சீன நிறுவனம் டார்கெட் முடிக்காத தங்கள் ஊழியர்களை "நாய்" போல சாலையில் நடந்து செல்லுமாறு தண்டனை வழங்கி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2019, 02:48 PM IST
வீடியோ: டார்கெட் முடிக்காத ஊழியர்களை சாலையில் நாய் போல நடத்திய நிறுவனம் title=

நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை (டார்கெட்) நீங்கள் அடைய முடியவில்லை என்றால், நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும். இப்படி நீங்கள் நினைத்தது உண்டா? கண்டிப்பாக நீங்கள் இதைப் பற்றி யோசித்திருக்க மாட்டீர்கள், ஆனால் ஒரு நிறுவனம் ஊழியர்கள் இலக்கை அடையாததால், அவர்களை சாலையில் முட்டிபோட்டு, கைகளை கீழே வைத்து சுற்றி வர சொல்லி தண்டனை வழங்கி இருக்கிறார்கள். இது பார்ப்பதற்கு சாலையில் "நாய்" நடந்து செல்வது போல உள்ளது. முழங்குவதற்கு வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இது மட்டுமல்லாமல், ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் சரியாக வேலை செய்யாவிட்டால், அவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கு ஒரு கட்டணத்தை செலுத்த வேண்டும். இதேபோல ஒரு சீன நிறுவனம் டார்கெட் முடிக்காத தங்கள் ஊழியர்களை "நாய்" போல சாலையில் நடந்து செல்லுமாறு தண்டனை வழங்கி உள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைராலாகி வருகிறது. இந்த வீடியோ சீன ஷான்டோங்க்கு சொந்தமானது. இந்த வீடியோவில் இலக்கை அடையாத அவர்களை சாலையில் முட்டிபோட்டு, கைகளை கீழே வைத்து சுற்றி வர சொல்லி நடந்து செல்கின்றனர். போலீசார் வரும்வரை, இந்த தண்டனை தொடர்ந்தது. பின்னர் சிறிது நேரம் மட்டும், அந்த நிறுவனம் மூடப்பட்டது. பின்னர் வழக்கம் போல இயங்கியது. 

 

இதற்கு முன்பும் இதேபோன்ற வீடியோ வெளிவந்தது, அதில் ஒரு பெண் ஊழியரின், வேலை சரியாக செய்யாத ஊழியர்களை வரிசையாக நிற்க வைத்து, அனைவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News